உள்ளூர் செய்திகள்

ஒரு பள்ளி ஒரு பெருமை ஒரு கோரிக்கை

'என்.வி.டி.ஏ.,' மென்பொருள் உதவியுடன் துல்லியமாக தட்டச்சு செய்கின்றனர் இப்பள்ளியின் 38 மாணவர்கள். தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த நடுநிலைப் பள்ளி இயங்குகிறது! பள்ளி: இப்பள்ளியில் பயின்று தற்போது அரசுப்பணிகளில் சாதித்து வரும் முன்னாள் மாணவர்கள், கடந்த ஆண்டு இப்பள்ளிக்கு 'பொன் விழா' எடுத்துள்ளனர்; கூடவே அவர்கள் கொடுத்த அர்த்தமுள்ள கடிகாரப் பரிசு, தான் ஒவ்வொரு மணி கடக்கும்போதும் ஒலி எழுப்புவதோடு அல்லாமல் திருக்குறள் சொல்லி மனம் நிறைக்கிறது! பெருமை: 'யாருக்கும் சளைத் தவன் அல்ல நீ என்று அன்றாடம் எனக்கு உணர்த்தும் பள்ளி இது. கடந்த செப்டம்பர் மாதம், 'முதல்வர் கோப்பை' கைப்பந்து போட்டியில் மாவட்ட அளவில் எங்களுக்கு மூன்றாவது இடம்! அணியை வழி நடத்திய என் திறனுக்கும் வெற்றிக்கும் காரணம் இப்பள்ளிதான்!' - கி.விக்னேஷ், 8ம் வகுப்பு. கோரிக்கை: 'திறன்மிகு ஆசிரியர்கள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகள் கொண்ட எங்கள் பள்ளியின் 'ஹைடெக் லேப்' மாணவியர் விடுதி அறையில் அமைந்திருப்பது சிரமம் தருகிறது; இதை இடம் மாற்ற வேண்டும். அதேபோல், கற்பித்தலை மேம்படுத்த 'ஸ்மார்ட்போர்டு' அவசியப்படுகிறது!' - ப.வடிவேலன், தலைமை ஆசிரியர். 'சாதிப்பதற்கு எக்குறைபாடும் தடையல்ல' என்கிறது பார்வை அற்றோருக்கான இப்பள்ளி!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !