உள்ளூர் செய்திகள்

ஒரு பள்ளி பெருமை கோரிக்கை

தக்கலை சரகம், கப்பியறை பேரூராட்சிக்கு உட்பட்ட கஞ்சிக்குழி அரசு நடுநிலைப்பள்ளியான இது, 55 ஆண்டு கால வரலாறும், 'கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐ.எஸ்.ஓ., 9001:2015 சான்றிதழ் பெற்ற முதல் அரசுப்பள்ளி' எனும் பெருமையும் கொண்டது! பள்ளி: டைல்ஸ் தளம், கண்காணிப்பு கேமரா உள் ளிட்ட வசதிகளோடு தனி யார் பள்ளி போல் ஜொலிக்கும் இப்பள்ளி, தன் மாணவர்களின் ஆங்கில மொழியறிவு விருத்திக்காக, 'சூப்பர் நோவா' ஆப் பயன்படுத்துகிறது. மறுபுறம், விவசாயம் காக்க மாணவர்களை வயல்வெளிகளுக்கு அழைத்துச் சென்று நாற்று நடவும் பழக்குகிறது! பெருமை: 'தமிழ், ஆங்கில பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் தன்னம்பிக்கையை எனக்குத் தந்தது என் பள்ளி! 2022ம் ஆண்டு முதல் சிலம்பம் கற்றுவரும் நான் சவுடு முறை, தடுப்பு முறை சிலம்பத்தில் சீனியர் அளவில் இருக்கிறேன். பள்ளிகளுக்கு இடை யிலான, 'சுதந்திர தின போட்டி - 2024'ல் நான் பரிசு பெறக் காரணம் என் பள்ளியே!' ச.ஹெர்சோன், 7ம் வகுப்பு கோரிக்கை: 'பத்தாண்டு களுக்கு முன் பள்ளி மூடப்படும் சூழலில், பள்ளி மேலாண்மை குழுவால் ஏற்படுத்தப்பட்ட வசதிகள் இவை! பாட ஆசிரியர்கள் மூன்று பேரும் கற்பித்தலில் தொடர்ச்சியாய் ஈடுபட, தலைமை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட வேண்டும்; கூடுதல் வகுப்பறைகள் அவசியம் வேண்டும்!' லா.ஆன்சி சோபா ராணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !