உள்ளூர் செய்திகள்

ஒரு பள்ளி ஒரு பெருமை ஒரு கோரிக்கை

இன்னும் இரண்டு ஆண்டுகளில் 'பவள விழா' கொண்டாடவிருக்கும் பள்ளி திருப்பத்துார் வாணியம்பாடி அரசு நகராட்சி மாதிரி மேல்நிலைப் பள்ளி இது; 'ஸ்மார்ட் போர்டு' வகுப்பறைகள், கணினி மற்றும் அறிவியல் ஆய்வகம் உள்ளிட்ட வசதிகளோடு கலை இலக்கியம் சார்ந்த பயிற்சிகளையும் மாணவ மாணவியருக்கு அளிப்பதால், 2022ல் 'தகைசால் பள்ளி' அந்தஸ்து பெற்றிருக்கிறது . பள்ளி: மாவட்டத்தில் இப்பள்ளியில் மட்டுமே 'அரசியல் அறிவியல் - புவியியல்' பாடப்பிரிவு உண்டு என்பதால், குடிமைப் பணியினை கனவாக கொண்டிருக்கும் மாணவர்கள் இப்பள்ளியை தேடி வந்து சேர்க்கை பெறுகின்றனர். ஜே.இ.இ., மெயின் மற்றும் 'நீட்' தேர்வுகளுக்கும் வார இறுதி நாட்களில் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பெருமை: 'புதுச்சேரி மாணவியான நான் கடந்த ஆண்டு இப்பள்ளிக்கு வந்தேன். வளையப்பந்து போட்டி களில் மாவட்ட அளவில் சாதித் திருக்கும் இப்பள்ளியில், சிலம்பம் கற்கும் என் விருப்பத்தை சொன்னதும் முறையான பயிற்சி தரப்பட்டது. இன்று, மண்டல அளவிலான சிலம்ப போட்டியில் எனக்கு 3வது இடம்!' - 10ம் வகுப்பு மாணவி தன்யஸ்ரீ . கோரிக்கை: 'முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லாததால், மழைக்காலங்களில் மைதானத்தில் தேங்கும் நீரை கடந்து ஆய்வகங் களுக்கு செல்வது சிரமமாக இருக்கிறது. இப்பிரச்னையை நிரந்தரமாக தீர்க்கும் கோரிக்கை வைத்து ஆசிரியர்களும், மாணவர் களும் பெரும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்!' - தலைமை ஆசிரியர் வேலுச்சாமி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !