வா வாசி யோசி...
'சினிமா நடிகனே தலைவன்' என கூச்சலிடும் கூட்டமே... இவர்களுக்கும் உங்கள் வயதுதான்; இவர்கள் கலைஞனின் திறமைக்கு கை தட்டுவதோடு சரி; இவர்களின் சிந்தனை வேறு... தலைவன் வேறு! தி.சிவகுமார்: 'என்னைவிட நல்லா படிக்கிற என் அண்ணன் உதயகுமார், என் படிப்புக்காக அவன் படிப்பை தியாகம் பண்ணிட்டு வேலைக்குப் போறான். தியாகம் பண்ற வயசெல்லாம் இல்லை; எனக்கு 18, அவனுக்கு 22; அவ்வளவுதான்! ஆனா, ஒரு அண்ணன் தகப்பனா மாறி நிற்கிறான். அவன்தான் என் ஹீரோ! 'வி.பவானி: 'ரத்தன் டாடாவின் நிழல் ஷாந்தனு நாயுடுவை நான் கொண்டாடுறேன். விபத்துகள்ல இருந்து நாய்களை காக்குற 'ரிப்ளெக்டிங் காலர்' தயாரிச்சது, முதியோர் பராமரிப்புக்காக 'குட் பெல்லோஸ்'ங்கிற 'ஸ்டார்ட் அப்' துவக்கினது, வாசிப்பை நேசிக்க வைக்கிற 'புக்கீஸ்' இயக்கம் துவக்கினது... வாவ்... ஷாந்தனு சூப்பர் ஸ்டார்! 'அ.சயோம்: 'வறுமையான சூழல்ல பிறந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, இன்னைக்கு உலகின் நம்பர் ஒன் பணக்கார விளையாட்டு வீரர். 'என்னாலேயே முடியுறப்போ உன்னால ஏன் முடியாது'ன்னு ஒவ்வொரு நாளும் என்னை உசுப்புற அவர்தான் என் குரு... என் வழிகாட்டி... என் தலைவன்!'இந்த இந்திய எதிர்காலங்களை, சென்னை, அரும்பாக்கம் டி.ஜி., வைஷ்ணவ் கல்லுாரியில் செதுக்கி வரும் பொருளாதார உதவிப் பேராசிரியர் உமாபதிக்கு வாழ்த்துகள்.