மாஸ்க்
'வேவு பார்ப்பதையே வேலையா கச் செய்யும் வேலுவுக்கு, 'பசுத்தோல் போர்த்திய புலியான பூமியிடம் இருந்து 440 கோடி ரூபாயை சுருட்டியவர்கள் யார்' என கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம். 'பூமியை எதிர்க்கவும் முடியாது; பணத்தை எடுத்தவர்களை காட்டிக் கொடுக்கவும் முடியாது' எனும் நிலையில், வேலுவால் என்ன செய்ய முடிந்தது? 'வழி தவறிய பசுங்கன்று தாயுடன் சேர உதவி செய்யுங்களேன்' வகையிலான சிறார் புதிர்கள் அளவுக்கு கூட ரசிக்க இயலாத திரைக்கதை; சரி... 'மூளைக்கு ஓய்வு தரத்தானே படம் பார்க்கிறோம்' என்பவர்களுக்கான கதையா என்றால், சுமையில்லாத திரைக்கதையாகவும் அது இல்லை ! தொழில்முறை துப்பறிவாளன் போல சிந்தித்து, வளவள கொழகொழ பேச்சுகள் இல்லாது எதையும் நேருக்கு நேராக அணுகும் வேலு கதாபாத்திரத்திற்கு கவின் சாலப் பொருத்தம். ஆனால், ஒருகட்டத்திற்கு மேல் அந்த அதீத 'ஸ்மார்ட்' குணாதிசயத்தை நம்மால் ரசிக்க முடியவில்லை. பூமியின் 'ஒயிட் காலர்' வில்லத்தனத்தை ஆண்ட்ரியாவின் கண்கள் நமக்குள் நன்றாக கடத்துகின்றன! இயக்குனர் நெல்சனின் குரலில் கதைக்கு தரப்படும் நகைச்சுவை பாணி முன்னுரையும், கதையில் நிகழும் நகைச்சுவை சம்பவங்களும் க்ளைமாக்ஸின் எழுச்சிமிகு சூழ்நிலைக்கு எந்தவகையிலும் துணை செய்யவில்லை! 'நல்லவர்களாக இருந்தால் ஏமாற்றப்படுவீர்கள்' என்ற அறிவுரைக்கு, 'நமக்குள் இருக்கும் நல்லவனைக் காப்போம்' என்று பதிலுரை எழுதியிருக்கிறார் இயக்குனர் விகர்ணன் அசோக். ஆனால், அதை காமெடி, த்ரில்லர், கொலை, கொள்ளை எனும் ஏகப்பட்ட விஷயங்களை கலந்து எழுதியதால் 'மாஸ்க்' கழன்று விட்டது. @block_B@ வாலாக இருந்திருக்க வேண்டிய கருத்துப் பகுதி வெகுவாய் நீண்டதால் சிதைந்து விட்டது உடல்!@@block_B@@@block_B@ 'நல்லவங்க நல்லா இருக்கணும்' - இதைச் சொல்ல ஒரு கதை!@@block_B@@