மிஸ் மூளைக்காரி தமிழச்சிடா...
பாடறியேன்... படிப்பறியேன்... பள்ளிக்கூடந் தானறியேன்... நிறுத்தும்மா... உனக்கு 'உளங்கவர் ஓவியமே... உற்சாக காவியமே... ஓடை நறுமலரே...' பாட்டு தெரியுமா; அதுவும் மூச்சு விடாம... தெரியாது சார்... ஆனா, இதை மூச்சுவிடாம சொல்ற நம்ம மதிப்பிற்குரிய முதல்வர் என்னென்ன சொல்லி இருக்கார்னு தெரியும்! என்னம்மா... சங்கீத மேடையை அரசியல் மேடையா மாத்துறியா; எங்கே... அவர் சொன்னதுல ஏதாவது ஒண்ணு சொல்லு பார்ப்போம்! பிப்ரவரி 18, 2017 சட்டசபையில எதிர்க்கட்சி தலைவரா இருந்த அவர், தன் சட்டையை தானே கிழிச்சுக்கிட்டதா குற்றச்சாட்டு எழுந்தப்போ, 'இதுக்காகத்தான் சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யணும்னு தி.மு.க., தொடர்ந்து கேட்குது'ன்னு சொன்னாரு! ஆமா... இதை எதுக்காக நீ இப்போ சொல்றே? ஜே.கே.பி., சார்... இப்போ நான் பாடின மாதிரியான நாட்டுப் பாடல்கள் ஏற்கெனவே மக்களுக்கு பரிச்சயம்தான்; பாவம்... மறந்துட்டாங்க! அதை நான் ஞாபகப்படுத்தினதும் எப்படி ரசிச்சாங்கன்னு பார்த்தீங்கதானே? ஓ... புரியுது; 'கடந்து அஞ்சு வருஷமா சட்டசபை நிகழ்வுகளை நம்மால முழுமையா தெரிஞ்சுக்க முடிஞ்சதா'ன்னு மறைமுகமா கேட்குறே; ஏம்மா... நீ அந்த கோஷ்டியா? எந்த கோஷ்டி சார்... 'காசா மேல இஸ்ரேல் நடத்தின தாக்குதலை கண்டிச்சு மேடையேறி கோஷம் போட்ட நம்ம முதல்வர், வங்கதேச ஹிந்துக்கள் வரிசையா பலியாயிட்டு இருக்குறப்போ அமைதி காக்குறது ஏன்'னு கேட்குற கோஷ்டியை சொல்றீங்களா; இல்ல... '1,000 ஆண்டுகளுக்கு மேல கம்பீரமா நிற்குற குஜராத் சோமநாதர் கோவிலை கஜினி முகமது தாக்கினது கொள்ளை அடிக்கிறதுக்காக இல்ல... அது, வெறுப்பு, தீவிரவாதத்தோட அடையாளம்'னு பிரதமர் சொன்னதை சொரணையோட சிந்திக்கிற கோஷ்டியை சொல்றீங்களா? நிறுத்தும்மா... இப்போ, உனக்கு என்ன வேணும்? பெருசா ஒண்ணும் இல்ல சார்; என் கையில இருக்குற இந்த விசிலை இங்கே நான் ஊதணும்; அதுக்கு நீங்க அனுமதிக்கணும்! அடடா... பிரமாதம்... நான்கூட உன்னை என்னவோ நினைச்சுட்டேன்; நீ ஊதும்மா... தமிழர்களோட அறிவை உலகம் புரிஞ்சுக்கிற அளவுக்கு சத்தமா ஊதும்மா.