உள்ளூர் செய்திகள்

முதல்வரே... ஒரு நிமிஷம்!

செய்தி: அரசு மருத்துவமனை அலட்சியம்; பிரசவத்திற்குப் பின் சீரழிந்த பெண்ணின் உடல்நலம்! அநீதி: அரசு தரப்பில் உரிய உயர்சிகிச்சை இரண்டரை ஆண்டுகளாக தாமதிக்கப்படும் கொடுமை! அரசே... கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் எனக்கு நிகழ்ந்த துயரம் இது!ஈரோடு, கீழ்வானியைச் சேர்ந்தவளான எனது பெயர் ரம்யா; வயது 26. கர்ப்பகால பரிசோதனைகளில் வெகு ஆரோக்கியமாக இருந்த எனக்கு, செப்டம்பர் 12, 2022ல் கோபி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை சுகப்பிரசவமானது! ஆனால், பிரசவ நேரத்தில் ஆசனவாய் கிழிந்த பிரச்னையை சீர்செய்வதிலான அலட்சியத்தால் சிறுநீர்ப்பாதை வழியாக மலம் வெளியேறத் துவங்கியது! செப்டம்பர் 26, 2022ல் கோவை அரசு மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சை; பல்வேறு அலைக்கழிப்புக்குப்பின், சேலம் அரசு மருத்துவமனையில் ஜூலை 29, 2024ல் ஆசனவாயை முழுமை யாக சீரமைக்கும் அறுவை சிகிச்சை; ஆனாலும், என் பிரச்னை தீரவில்லை!இன்றும், உடலுக்கு வெளியே தொங்கும் பை வழியாகவே கழிவு வெளியேறுகிறது. நான்கு நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டிய பையை, வசதியின்மையால் வாரத்திற்கு ஒரு முறை மாற்றுகிறேன்! கைக்குழந்தையுடன் நான் அனுபவிக்கும் இந்த நரக வேதனைக்கு 'விடியல்' கிடையாதா அரசே?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !