உள்ளூர் செய்திகள்

ஏழரை கேள்விகள்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இந்த கேள்விகளை எல்லாம் கேட்கணும்ங்கிறது என் விருப்பம்!- இபின் ராம்சிங், மென்பொருள் நிறுவன ஊழியர், சென்னை.1. 'ஆண் மகனெல்லாம் அப்பா அல்ல... நம்மை பெற்றவர்களே அப்பா; தமிழரல்லாத நடிகர் ரஜினி எங்களை ஆள நினைப்பதை எதிர்க்கிறோம்' என்று முழங்கியதெல்லாம் தவறு' என இப்போது வருந்துகிறீர்களா?2. கட்சியினர் வெளியேறுவது பற்றி கேட்டால், 'தி.மு.க., என் கட்சியை சுத்தப்படுத்தி தருகிறது' என்கிறீர்களே... தமிழகத்தை சுத்தமாக்க விரும்பும் சீமானுக்கு சொந்த கட்சியின் அசுத்தங்கள் புலப்படவில்லையா?3. அரசியலுக்கு வருவதற்கு முன்னால், தேர்தலில் ஓட்டு போடும் முன் ஒரு சாமானியனாக, வேட்பாளர்களை பற்றி என்னென்ன ஆராய்ந்தீர்கள்?4. 'என் தாத்தன், என் பாட்டன், என் அம்மா, என் தங்கை' என தமிழர்களை வாஞ்சையுடன் உறவு கொண்டாடும் உங்களை, எல்லா தேர்தல்களிலும் மக்கள் தோற்கடித்ததன் அர்த்தம் என்ன?5. 'தங்களை யார் ஆள வேண்டும் என முடிவெடுப்பதில் தமிழர்கள் புத்திசாலிகள்' என்று நம்புகிறீர்களா; 'ஆம்' எனில் உங்களின் எதிர்காலம் என்ன; 'இல்லை' எனில் உங்களுக்கான வாய்ப்பு எப்போது கிடைக்கும்?6. 'எனது ஆட்சியில் 'டாஸ்மாக்' இருக்காது' என்கிறீர்களே... மதுவுக்கு அடிமையானவர்களை சேதாரமின்றி மீட்க உங்களின் திட்டம் என்ன?7. 'பெண்களின் கண்ணீருக்கு காரணமானவன் சீரழிந்து போவான்' என்பது மூடநம்பிக்கையா? 7½ 'தம்பி' அழைப்பு ஆளுமை தந்திரமா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !