உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / பூனைகளே என்னோட உலகம் கேட் ஷோ நடுவர் ஆனிகரோல்

பூனைகளே என்னோட உலகம் கேட் ஷோ நடுவர் ஆனிகரோல்

''மிஸ் இண்டியா, மிஸ் வேல்டு டைட்டிலுக்கு, எவ்ளோ போட்டி இருக்குமோ அதேமாதிரி தான், கேட் ஷோவுக்கும்.... யுனிக் அனாடமி, பேஸ் ஸ்ட்ரக்சர், வாக்கிங் ஸ்டைலுக்கு மார்க் உண்டு. டைட்டில் அடிக்கிற கேட்ஸ்க்கு, மார்கெட் வேல்யூ ரொம்ப காஸ்ட்லி'' என்கிறார், இன்டர்நேஷனல் கேட் ஷோ ஜட்ஜ் ஆனிகரோல்.கேட் ஷோ, செமினார்னு பிசியா இருந்த, ஆனிகரோலை நேரில் சந்தித்தோம். வீடு முழுக்க, 'மியாவ்' சத்தம் கேட்டுச்சு. இவ்ளோ வெரைட்டி ப்ரீட்ஸான்னு ஆச்சர்யத்தில் ஆழ்ந்தோம்.கேட் ஷோ நடுவர் பணி பத்தி கேட்டதும், ஆர்வமாய் பகிர்ந்தார்... பூனைகள்ல 100க்கும் மேல வெரைட்டி இருக்கு. பொதுவா, நம்ம நாட்டுல, பெர்சியன் லாங் ஹேர், பிரிட்டிஷ் லாங் ஹேர், ஷார்ட் ஹேர், எக்ஸோடிக் ஷார்ட் ஹேர், ட்ரடிஷனல் லாங் ஹேர், பெங்கால் கேட், கார்னிஷ் ரெக்ஸ் ப்ரீட்ஸ் தான் விரும்பி வளக்குறாங்க. இதுல, ஒவ்வொரு ப்ரீடுக்கும், அனாடமி மாறும். ஸ்ட்ரக்சர் பார்முலா இருக்கு. குறிப்பா, பேஸ்ல, ஐஸ், நோஸ், இயர்ஸ் கரெக்ட்டா இருக்கணும். உடம்போட லென்த்துக்கு ஏத்தமாதிரி, லெக், டெய்ல் சைஸ் மாறும். ஷோக்கு வர்ற கேட்ஸோட கண்கள் பளபளப்பா இருக்கணும். ராஜ கம்பீரமா, தலையை மேல துாக்கிட்டு நடக்கும் போது, முகத்துல ஒரு கர்வம் தெரியணும். அதுதான், கேட் வாக். கேட்ஸ் பைட்ஸ் வரிசையா இருக்கணும். இதோட தாடைய புடிச்சா, கடிக்க கூடாது. ஒரு கையில துாக்கும் போது, அதோட ஹேர் ஷைன்னிங்கா மின்னணும். இதெல்லாம் இருந்தா தான், அடுத்தடுத்த ரவுண்டுக்கு குவாலிபை ஆகும். தன்னோட ப்ரீட் பத்தி, ஓனருக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கணும். ஜட்ஜ் டீம் கேக்குற கேள்விக்கு, டக் டக்ணு ஓனர் பதில் சொல்லணும். இப்படி நிறைய விஷயங்கள் இருக்கு. தி பெஸ்ட் கேட் அவார்ட் வாங்கிட்டா, அதோட ஜெனிட்டிக் குவாலிட்டியானதுன்னு அர்த்தம். அந்த ப்ரீடர தான், கேட் பிசினஸ் மார்கெட்டே தேடும். அதோட எல்லா குட்டிகளும் காஸ்ட்லியா விற்கலாம் என்றார்.ஒரு கேட் லவ்வரா உங்க பயணம் பத்தி...நான் ஒரு ஆங்கிலோ இண்டியன். பிறந்தது, வளர்ந்தது எல்லாமே கோவை தான். அப்பாவோட பூர்வீகம் அயர்லாந்து. கேட்ஸ் தான் என்னோட உலகம். வேற யாரும் எங்களுக்கு நடுவுல வரக்கூடாதுன்னு, நான் மேரேஜ்ஜே பண்ணிக்கல. குவாலிட்டியான ஜெனிட்டிக் உருவாக்குறது, ஷோ ஜட்ஜ் ஆகுறதுக்குன்னே, ரஷ்யால கோர்ஸ் படிச்சேன். நிறைய கேட் லவ்வர்ஸ்க்கு செமினார் நடத்துறேன். இந்த பிறப்பே கேட்ஸ்க்கு தான்னு ஆகிடுச்சு, என்றார்.'மியாவ்' பற்றி பேச: 88383 96346


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ