என் பூனைக்கு அடிக்கடி காய்ச்சல் வருகிறது. வீட்டில் செய்ய வேண்டிய முதலுதவி என்னென்ன?-- வி.ராதா, கோவை.வெயில் காரணமாக உடல் வெப்பநிலை அதிகரிப்பதால், பூனைகள் அதிகம் பாதிக்கப்படுகிறது. இதன் உடல் வெப்பநிலை, 104 டிகிரிக்கும் மேல் இருந்தால் நாய் போல, நாக்கை வெளியே நீட்டி மூச்சு விடும். 105 டிகிரியை தாண்டினால், ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்யலாம்.முதலுதவியாக, ஐஸ்பேக் மூலம் ஒத்தடம் கொடுக்கலாம். முடி குறைவாக உள்ள அடிவயிறு, தலையின் மேல்பகுதி, கால்களுக்கு இடையே, சிறிது நேர இடைவெளியில் ஒத்தடம் கொடுத்தால், உடல் வெப்பநிலை குறையும். உடனே, மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும்.பொதுவாக, நாய், பூனைகளுக்கு வியர்வை சுரப்பிகள் இல்லாததால், 'ஹேர் கோட்' வழியாகவே, வெப்பத்தை வெளியேற்றும். வெயில் காலங்களில், பலர் பூனைகளின் முடியை ட்ரிம் செய்துவிடுகின்றனர். இதனால், அவை பெரிதும் பாதிக்கப்படும்.மதிய நேரத்தில், ஈரத்துணியால் உடலை துடைத்து விடலாம். நீர்ச்சத்து குறையாமல் இருக்க, தண்ணீர், பால், மோர் கொடுக்கலாம். - வி.மகாலட்சுமி, கால்நடை மருத்துவர், பொள்ளாச்சி.