பிஷ் லவ்வர்ஸ் விரும்புற வெரைட்டிகளை வலைவிரிச்சு தேடி வைச்சிருக்கேன். வழக்கமான மீன்களே என்னோட கலெக் ஷன்ல இல்ல; கடல்லேயே இல்லயாம்கிற வெரைட்டியா பார்த்து வெளிநாடுகள், வேற மாநிலங்கள்ல இருந்து, இறக்குமதி பண்ணி வச்சிருக்கேன். ஒவ்வொரு மீனுக்கும் யுனிக் கலர், பிசிக்கல் சிஸ்டம், புட் ஹாபிட் இருக்கு. இந்த மாதிரி மீன்களை தேடி வாங்குறவங்க எண்ணிக்கை அதிகம்' என்கிறார் கோவையை சேர்ந்த, மீன் பண்ணை உரிமையாளர் சஞ்சய்.சில அரியவகை மீன்கள்
அராபைமா கிகாஸ்: இது கிட்டத்தட்ட, 13 அடி நீளம், 200 கிலோ எடை வரை வளரும். யானை பசிக்கு சோளப்பொறிங்கற மாதிரி இதுக்கு பசிச்சா, மற்ற மீன்கள், நத்தை, பறவையை கூட சாப்பிடும். ரெட், ஆரஞ்சு கலர் மீன்களுக்கு ரொம்ப கிராக்கி. இதை தொட்டியில வளர்க்கும்பட்சத்துல சிக்கன் ஹார்ட், பிஷ், நத்தை சாப்பிட கொடுக்கலாம். தண்ணியில இருக்கற ஆக்ஸிஜனையே சுவாசிக்கறதால, டேங்குக்கு மோட்டார் தேவைப்படாது.ரெட் மொசைக் சன்னா: இதோட கலருக்கே, எவ்வளவு வேணும்னாலும் விலை கொடுத்து வாங்கலாம். ரெட், மயில் பச்சை கலர்ல, நெருக்கமாக இறக்கை, வால் இருக்கறதால தண்ணீல நீந்துறத பார்த்துக்கிட்டே இருக்கலாம். இத, ஏசி ரூம்ல வளர்க்கணும். ஐஸ் வாட்டர் தான், இதோடு ஸ்கின்னுக்கு நல்லது. கிட்டத்தட்ட 5 செ.மீ., இருக்கற ஒரு பிஷ்ஷோட விலை, 2,500 ரூபாய்.பிளாட்டினம் அலிகேட்டர் கர்: பேருக்கு ஏத்தமாதிரி ஸ்கின்னும் ஒயிட்டா, கிளிட்டர் மாதிரி மின்னும். இதோட பற்கள் ரொம்ப ஷார்ப். ஈஸியாக மீன்களை புடிச்சு சாப்பிடும். முதலை மாதிரி, உருவம் இருக்கும். இதேமாதிரி, மஞ்சள், கோல்டன் கலர்ல இருக்க, கோல்டன் அலிகேட்டர் கர்ரோட, மார்க்கெட் வேல்யூ அதிகம். வளர்ந்த ஒரு கர் வெரைட்டி பிஷ் வெறும், 5.8 லட்சம் ரூபாய்.லோச்: பார்க்க புழு மாதிரி இருக்கும் லோச் மீன்களில், 1,249 வெரைட்டி இருக்கு. தொட்டியில் இருக்கும் பாசான், டிரை பிஷ் புட் தான், விரும்பி சாப்பிடும். தனிமைய விரும்பாததால, கூட்டமா மற்ற மீன்களோட சேர்த்து வளர்க்கலாம். தொட்டி அடியிலயே தான் இருக்கும். நீந்தும் போது கூட, மேல அதிகம் வராது. ஆனா, ஓனர் வரும்போது, குஷியாகி நீந்த தொடங்கிடுமாம். ரொம்ப இன்டெலிஜென்ட்டான இந்த பிஷ், ரேர் வெரைட்டிங்கறதால, உடனே சேல் ஆகிடும்.