''உலகில், 256 வகை நாய்கள் உள்ளன. இந்தியாவில் இருப்பவை மட்டும் 65 வெரைட்டி 'ப்ரீட்ஸ்'. இதன் பெடிகிரியை பாதுகாப்பதற்கு, 'கென்னல் கிளப் ஆப் இண்டியா' (கே.சி.ஐ.,) போன்ற பல்வேறு அமைப்புகள் முனைப்பு காட்டி வருகின்றன. இதில் என்னுடைய சிறு பங்களிப்பு இருக்க வேண்டுமென்ற உந்துதலில் தான், இத்துறைக்குள் வந்தேன்,'' என்கிறார்,'இன்டர்நேஷனல் டாக் ஷோ ஜட்ஜ்' யசோதரா.உங்களுக்கும் பப்பிக்குமான பந்தம்?
சின்ன வயசுல இருந்தே டாக்ஸ் புடிக்கும். இதை செல்லப்பிராணியா வளர்க்கறதை தாண்டி, குவாலிட்டியான பப்பி உருவாக்கணும்னு திட்டமிட்டேன். இதுக்காக நிறைய ஆய்வு செய்தேன். அப்புறம் தான், பிரீடிங் பீல்டுக்குள்ள வந்தேன். சிங்கப்பூர், சீனா, ஆஸ்திரேலியா-னு வெளிநாடுகளுக்கு போய், தகுதியான சேம்பியன் நாய்களை இறக்குமதி செய்தேன். இதன் மூலம் சிறந்த உடல்திறன் கொண்ட, ஜெர்மன் ஷெப்பர்டு, பாக்ஸர், டாபர்மேன், கிரேட்டேன், செள-செள-னு, 15 வெரைட்டி ப்ரீட்ஸ்ல, 10 ஆயிரத்துக்கும் மேலான பப்பிகளை விற்பனை செய்திருக்கிறேன். இதுல, சேம்பியன்ஸ் பப்பிஸ் மட்டும் 500ஐ தாண்டும்.அடிப்படை தடுப்பூசிகள் போட்ட பிறகு தான், பப்பியை விற்பேன்.இதற்கான உணவுமுறை, பராமரிப்பு பற்றி, கவுன்சிலிங் கொடுப்பேன். 'ஷோ குவாலிட்டி பப்பி'ங்கறதால, 5 லட்சம் வரைக்கும் விலை கொடுத்து வாங்குவாங்க.பிரீடர்-ஷோ ஜட்ஜ் எப்படி?
நிறைய ஷோ நடத்தும் போது தான், குவாலிட்டியான பெடிகிரிய பாதுகாக்க முடியும்னு தெரிஞ்சுது. இதுக்காக,'ஜட்ஜ்மெண்ட் கோர்ஸ்'படிச்சேன். 'கே.சி.ஐ' நடத்துற நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் படிப்பு தொடர முடியும்.நாய்களில்,ஒர்க்கிங், ஹண்டிங், வாட்சிங்-னு 11 பிரிவுகள் இருக்கு. இதைபற்றி முழுசா படிக்கணும். வருஷத்துக்கு ரெண்டு குரூப்னு, ஐஞ்சு வருஷத்துல,'கோர்ஸ்'முடிச்சேன். மூணு ஷோ 'இன்டர்ன்ஷிப்'முடிச்சதுக்கு அப்புறம் தான், சர்டிபிகேட் கிடைச்சுது.2012ல, ஷோ ஜட்ஜா ரிங்குல நுழைஞ்சேன். ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா, தைவான், சீனா-னு நிறைய வெளிநாட்டு ஷோல நடுவரா இருந்துருக்கேன். என்னை பொறுத்தவரைக்கும், உள்ளூர், வெளிநாடுங்கற பாகுபாடெல்லாம் கிடையாது. யார் கையில 'லீஸ்' இருந்தாலும், குவாலிட்டியான பப்பியாக இருந்தால்தான் மதிப்பெண்கள்கிடைக்கும். அந்த விஷயத்துல நான் ரொம்ப 'ஸ்டிரிட்டு'.உங்களை பத்தி...
நான், ரெண்டு பொண்ணுங்க, ஆதரவற்ற 78 நாய்கள், 60 பெடிகிரி ப்ரீட்ஸ்-னு குட்டி பேமிலி. டாக்ஸ்காக, பெங்களூரு, சென்னுார் ரோட்டுல, 2 ஏக்கர்ல, 110 ஏசி ரூம் கட்டியிருக்கேன். எங்க சுத்துனாலும், கென்னலுக்குள்ள வந்து இவங்களை பார்த்தா தான் நிம்மதியா இருக்கும். இந்த பிறப்பே,'பெடிகிரி' நாய்களை பாதுகாப்பதற்கும், தெருநாய்களுக்கு அடைக்கலம் கொடுக்கறதுக்கும் தான்-னு கூட அடிக்கடி தோணும்.