உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / தோனி வாங்கிய பெல்ஜியன் ஷெப்பர்டு

தோனி வாங்கிய பெல்ஜியன் ஷெப்பர்டு

நம்ம கிரிக்கெட் ஸ்டார், 'கூல் கேப்டன்' என, அழைக்கப்படும் 'தல' தோனி, திருப்பூரில் இருந்து பெல்ஜியன் ஷெப்பர்ட் வாங்கியிருக்கிறார். இதை தோனிக்கு வழங்கிய 'நாய்கொட்டில்' நிறுவனர் சதீஷ், இந்த பிரீடின் ரகசியத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். ''பொதுவா நன்றியுள்ள ஜீவன் என்ற அடைமொழி நாய்களுக்கு உண்டு. ஒவ்வொரு பிரீடுக்கும் வெவ்வேறு குணாதிசயம் கூடுதலாக இருக்கும். 'காவலுக்கு கெட்டிக்காரன்' என்பது தான் பெல்ஜியன் ஷெப்பர்டோட அடைமொழி. ஷெப்பர்டு வகை நாய்கள், ராணுவம், காவல்துறையில் துப்பறியும் பணிக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.அதிக உயரத்தில் குதிக்கும் இவ்வகை நாய்கள் போர்க்குணம் கொண்டிருந்தாலும் அமைதியாக, பிறரோடு எளிதில் பழகும் பண்பையும் பெற்றிருக்கின்றன. இதனால் இதற்கு தரப்படும் பயிற்சியை பொறுத்து பண்புகளை மாற்றி கொள்ளும். வீடுகளில் பாதுகாப்பிற்காக, ஷெப்பர்டு வகை நாய்களையே அதிகம் வளர்க்கின்றனர். குழந்தைகளை யாராவது தாக்க முன்வந்தால் உடனே சுதாரித்து கொண்டு, எதிராளியை தாக்கிவிடும். தோனியின் செல்லமகள் ஜிவாசிங்குக்காகவே, பிறந்து 100 நாள் ஆன 'பெல்ஜியன் ஷெப்பர்டு' வாங்கியிருக்கலாம்'' என்கிறார், சதீஷ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை