உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / தட்டி எடுத்த குட்டிப்பொண்ணு அரங்கம் அதிர கலக்கியது நின்னு

தட்டி எடுத்த குட்டிப்பொண்ணு அரங்கம் அதிர கலக்கியது நின்னு

கோவையில் சமீபத்துல நடந்த டாக் ஷோவுக்கு நிறைய என்ட்ரீஸ் வந்ததால, அரங்கமே பரபரப்பா இருந்துச்சு. 'வெஸ்டன்கார்ட்ஸ் கென்னல், டாக் ஹேண்டுலர் ---- ஷோபிகா'ன்னு மைக் அலறியது. கூட்டம் அதிர்ந்தது. என்னது! லேடி ஷோ ஹேண்ட்லராங்கற கேள்வியோடு திரும்பிய கூட்டத்தை மேலும் ஆச்சர்யப்படுத்தும் வகையில், ஒரு சிறுமி தன்னோட சிப்பிப்பாறையோட ஸ்டைல் வாக் போட்டபடி, மேடையின் நடுவே வந்து நின்றாள். நடுவர்களின் கேள்விகளுக்கு, டக் டக்ணு பதில் சொன்னாள். டாக் ஆப் தி ஷோங்கற பட்டம் மட்டும் தான் கொடுக்கலை. எங்கு திரும்பினாலும் ஷோபிகா புராணமாக இருந்தது.கோவை, வடவள்ளியில் வசிக்கும் ேஷாபிகாவுடன் ஓர் சந்திப்பு:

ஏன் டாக்ஸ் புடிக்கும்?

ஏன்னா, நான் அவங்க கூட தான் அதிகம் விளையாடுவேன். எங்க வீட்டுல எப்பவும், 5,6 டாக்ஸ் இருக்கும். என் அப்பா சிவா, டாக் டிரெயினர். அவர் என்ன சொன்னாலும் டாக்ஸ் கேக்கும். அதுமாதிரி நானும் கத்துக்க ஆசைப்பட்டேன். அவர் என்னதான் பண்றாருன்னு பாத்துக்கிட்டே இருப்பேன். அதேமாதிரி நானும் டாக்ஸ்கிட்ட பழகும் போது, என்கிட்ட அட்டாச் ஆகிடுச்சு. இப்போ என் பிரண்ட்ஸ் மாதிரி ஆகிட்டாங்க.

டாக்ஸ் பத்தி என்னெல்லாம் தெரியும்?

எங்க வீட்டுல, நாட்டு நாய்கள் தான் அதிகம் இருக்கு. கன்னி, கோம்பை, சிப்பிப்பாறை, ராஜபாளையம் பத்தி எல்லாமே தெரியும். அவங்களோட அனாடமி, ஸ்டாக்கிங், மூவ்மென்ட் பத்தி என்ன கேட்டாலும் சொல்லுவேன். பல்வரிசை காட்டுவேன். அவங்க கூட ஸ்டைல் வாக் பண்ணுவேன். இதனால தான் அடம்பிடிச்சி, டாக் ஷோ ஹேண்டில் பண்ணேன்.

எப்போ இருந்து ஷோ ஹேண்ட்லரானீங்க?

யூ.கே.ஜி., படிக்கும் போதே, நிறைய ஷோ போய் இருக்கேன். அங்க என்னதான் நடக்குதுன்னு பார்ப்பேன். போன வருஷத்துல இருந்து தான், ஷோ ஹேண்டில் பண்ண ஆரம்பிச்சேன். இப்போ வரைக்கும், 8 அவார்ட் வாங்கியிருக்கேனே!

என்ன படிக்கிறீங்க?

நான் செகண்ட் கிளாஸ் படிக்கிறேன். ஆனா, படிப்புல எப்போவும் பர்ஸ்ட் தான். நல்லா படிச்சு, பெட் டாக்டர் ஆகனும்கிறது தான் ஆம்பிஷன். அப்போதான் பெட்ஸ்ஸ ஹெல்தியா பாத்துக்க முடியும்.மழலை மாறாத மொழியில் கொஞ்சிய ஷோபிகாவுக்கு, ஆல் தி பெஸ்ட் சொல்லிவிட்டு புறப்பட்டோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ