சித்தாபுதுார் ஐயப்பன் கோவிலுக்குச் சென்றிருந்த மித்ரா, சாமி தரிசனம் முடித்து வெளியே வந்தாள்.அப்பகுதியில் நின்றிருந்த பா.ஜ., கொடி பறந்த காரை பார்த்த சித்ரா, ''என்னப்பா... பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்துச்சே; லோக்சபா தேர்தல் தோல்வியை பத்தி பேசுனாங்களா...'' என, கொக்கியை வீசினாள்.ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த மித்ரா, ''நானும் அதைத்தான் எதிர்பார்த்தேன். கூட்டத்துக்கு வந்திருந்தவங்களும், ஒருவித பதற்றத்துல இருந்தாங்க; 'டோஸ்' கடுமையா விழும். ஜெயிக்க வேண்டிய தொகுதியை இழந்துட்டோமே; காரணம் என்னன்னு கேட்பாங்கன்னு எதிர்பார்த்தாங்க. ஆனா, சம்பிரதாய சடங்கு மாதிரி, கூட்டத்தை நடத்தி முடிச்சிட்டாங்களாம். பூத் லெவல் நிர்வாகிகளை அழைச்சு, காரணங்களை கேட்கலையாம்,''''அரசியல்ங்கிறது வாழ்க்கையில, ஒரு அங்கம்னு நெனைக்கனும்; வெற்றி, தோல்வி சகஜம். ஒடம்பை கவனமா பார்த்துக்கோங்கன்னு, அண்ணாமலை ரொம்ப கூலா பேசிட்டு போனதுல, நிர்வாகிக நிம்மதி பெருமூச்சு விட்டிருக்காங்க. ஆனா, கிளை அளவில் தேர்தல் வேலைபார்த்த பொறுப்பாளர்கள் பலரும் ரொம்பவும், 'அப்செட்'டுல இருக்காங்களாம்,'' போலீஸ்காரங்க மகிழ்ச்சி
''போலீஸ்காரங்க ரொம்பவே சந்தோஷமாக இருக்காங்களாமே... ''''அதுவா... எலக்சன் டூட்டி பார்த்த போலீஸ்காரங்களுக்கு இன்னும் அலவன்ஸ் கொடுக்கலைன்னு நாம ரெண்டு பேரும் போன வாரம் பேசுனோமே. சி.எம்., கவனத்துக்கு போயிருக்கு. சட்டசபை கூட்டத்துல போலீஸ் மானியக்கோரிக்கையில சி.எம்., ஸ்டாலின் பேசுறப்போ, போலீஸ் துறையில இருந்து கருத்துரு கொடுத்ததும், அலவன்ஸ் விடுவிச்சிருவோம்னு வெளிப்படையா அறிவிச்சிருக்காரு,''''அப்புறம்...நம்மூர்ல இருக்கற போலீஸ்காரங்களுக்கு, ஏதாச்சும் ஒரு புத்தாக்க நிகழ்ச்சி நடத்திட்டு இருக்காங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, போலீசார் குடும்பத்தினருக்கு யோகா பயிற்சி கொடுத்தாங்க; ஏகப்பட்ட லேடீஸ் ஆர்வத்தோட கலந்துக்கிட்டாங்க.இதுவரைக்கும் இருந்த மனஅழுத்தம், டென்ஷன் 'கன்ட்ரோல்' ஆகுறதா அவுங்க சொல்லியிருக்காங்க,'' பாம்பு நடமாட்டம்
''ஆனா, கலெக்டர் ஆபீசுல டூட்டி பார்க்குற லேடி போலீஸ்காரங்க பீதியில இருக்காங்களாமே...''''அதுவா... கலெக்டர் ஆபீசுக்கு பின்னாடி... பாழடைஞ்ச பங்களாவுல கருவூலகம் செயல்படுது. இதுக்கு, 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கு. ராத்திரி நேரத்துல லேடி போலீஸ், பாதுகாப்பு பணியில இருக்காங்க. கட்டடம் ரொம்ப பழசு; எப்ப வேணும்னாலும் இடிஞ்சு விழற நிலைமையில இருக்கு.செடி, கொடி முளைச்சு புதர் மண்டி இருக்கறதுனால, பாம்பு நடமாட்டம் அதிகமாக இருக்குதாம். கோப்புகளை அட்டைப் பெட்டியில அடுக்கி வச்சிருக்காங்க. அதுக்குள்ள பாம்புகள் குடித்தனம் இருக்குதுங்க.பயர்போர்ஸ் காரங்க வந்தாலும் பிடிக்க முடியறதில்லை. தெனமும் உசுற கையில பிடிச்சுக்கிட்டு, விடியற வரைக்கும், லேடி போலீசார் பாதுகாப்பு பணியில ஈடுபடுறாங்க,'' என்றபடி, காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள பேக்கரி அருகே, ஸ்கூட்டரை நிறுத்தினாள் மித்ரா. இதுவும் பிரச்னைதாங்க!
காளான் பப்ஸ், காபி ஆர்டர் கொடுத்த சித்ரா, ''மித்து, இன்னொரு பிரச்னை கேள்விப்பட்டேன். ஊட்டிக்கு போறதுக்கு இ-பாஸ் முக்கியம் சொல்லியிருக்காங்கள்ல, அதுக்காக, மேட்டுப்பாளையம் பக்கத்துல கல்லார் துாரிபாலத்துல, இ-பாஸ் செக் போஸ்ட் அமைச்சிருக்காங்க,''''செக்போஸ்ட்டுல டூட்டி பார்க்குறதுல, ரெவின்யூ டிபார்ட்மென்ட்டை சேர்ந்த லேடீ ஸ்டாப்ஸ் ஜாஸ்தி. ஆனா, ஒரே ஒரு டாய்லெட்தான் வச்சிருக்காங்க; லேடீஸ், ஜென்ட்ஸ்ன்னு எல்லோரும் ஒரே டாய்லெட்டை யூஸ் பண்றாங்களாம்.இதுல, இன்னொரு கொடுமை; அடிக்கடி தண்ணீர் வராதாம். உயரதிகாரிகள் காதுக்கு கொண்டு போயும் கண்டுக்காம இருக்காங்களாம். இ-பாஸ் சிஸ்டத்தை செப்டம்பர் வரைக்கும் நீட்டிச்சதுனால, செக்போஸ்ட்டுல வேலைபார்க்குற ஸ்டாப்ஸ், இன்னும் மூனு மாசத்துக்கு எப்படி தாக்குப் பிடிக்கிறதுன்னு புலம்பிட்டு இருக்காங்க,'' தப்பிக்கும் ஆபீசர்
''அக்கா... ரெவின்யூன்னு சொன்னதும் எனக்கொரு சம்பவம் ஞாபகத்துக்கு வருது. கார்ப்பரேஷனுக்கு சொந்தமான ரிசர்வ் சைட்டை, தனியாருக்கு பட்டா போட்டுக் கொடுத்த விவகாரத்துல, யூசர் நேம், பாஸ்வேர்டுகளைத் திருடுனதை கண்டுபிடிச்ச, சைபர் கிரைம் போலீஸ்காரங்க, ரெண்டு அலுவலர்களை 'அரெஸ்ட்' பண்ணி, ஜெயில்ல போட்டுட்டாங்க.ஆனா, பட்டா போட்டுக் கொடுத்த துணை தாசில்தார் மேல எந்த நடவடிக்கையும் எடுக்கலை. அவரை தப்பிக்க வைக்கறதுக்கு, உயரதிகாரி 'சப்போர்ட்' பண்றாரோன்னு சந்தேகம் எழுந்துருக்கு,'' என்றபடி, காளான் பப்ஸை சுவைக்க ஆரம்பித்தாள். 'போஸ்டிங்' காலி
''மித்து, இதே மாதிரி ரெவின்யூ ஆபீசர்ஸ் செயல்பாடு, கார்ப்பரேஷன்லயும் ரொம்பவே மோசமா இருக்குதாம். கரன்சி கொடுத்தா கையெழுத்து போடுறாங்களாம்; கார்ப்பரேஷன் ஸ்டாப்ஸ் ரொம்பவே மனவருத்தத்துல இருக்காங்க,''''கார்ப்பரேஷன் ஸ்டாப்ஸ் வருத்தப்படுறதுக்கு, அப்படி என்ன நடந்துருக்குக்கா...''''கார்ப்பரேஷன்ல மொத்தம் எட்டு அசிஸ்டென்ட் கமிஷனர் போஸ்டிங் இருக்கு. மெயின் ஆபீசுல மூனு, ஜோனல்ல அஞ்சு. எப்பவும் ஜோனல் பதவியை கைப்பத்துறதுக்கு, பலரும் 'மூவ்' பண்ணுவாங்க.அதுல, ரெண்டு ஜோன்ல ரெவின்யூ டிபார்ட்மென்ட் காரங்க இருக்காங்க; ரெணடு ஜோன்ல முனிசிபாலிட்டியில இருந்து வந்தவங்க இருக்காங்க; ஒரு ஜோன்ல இன்ஜினியரிங் செக்சன் அதிகாரி கூடுதல் பொறுப்பு பார்க்குறாங்க,''''மெயின் ஆபீசுல 'வருவாய்' உள்ள பதவி காலியா இருக்கு; இன்னொரு ஆபீசர் கூடுதலா 'கவனி'க்கிறாங்க. கார்ப்பரேஷன்ல சீனியாரிட்டியில காத்துக்கிட்டு இருக்கற ஆபீசர்களுக்கு, பதவி உயர்வுல பணியிடம் கொடுக்கணும்னு சொல்றாங்க.லோக்சபா எலக்சனை காரணம் காண்பிச்சு, இதுவரைக்கும் போடாம இருந்தாங்க. இனி, போஸ்டிங் கிடைக்கும்னு நினைக்கிறாங்க. இப்போ பதவியில இருக்கறவங்களுக்கும், டிரான்ஸ்பர் ஆர்டர் வர்றதுக்கு வாய்ப்பு இருக்குன்னு, பேச்சு அடிபடுது. அதனால, ரெவின்யூ டிபார்ட்மென்ட்டுல இருந்து வந்த ஆபீசர்ஸ், துட்டு எண்ணுறதுல குறியா இருக்காங்களாம்,'' என்ற சித்ரா, காபியை உறிஞ்சினாள். லைசென்ஸ் முறைகேடு
''அதெல்லாம் இருக்கட்டும். கார்ப்பரேஷன்ல லைசென்ஸ் வாங்கித் தர்றதாச் சொல்லி, ஆயிரக்கணக்குல கலெக்ஷன் மேளா நடக்குதாமே...''''ஆமாப்பா... உண்மைதான்! நானும் கேள்விப்பட்டேன். கார்ப்பரேஷன் லிமிட்டுக்குள்ள நிறுவனம் நடத்தணும்னா, ஹெல்த் டிபார்ட்மென்ட்டுல லைசென்ஸ் வாங்கணும். அதுக்கு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தணும். 69வது வார்டுல டூட்டி பார்க்குற, ஹெல்த் செக்சன் ஊழியர் ஒருத்தரு, கடை கடையா போயி, 'டி அண்டு ஓ' லைசென்ஸ் வாங்கணும்னு சொல்லி, கரன்சி கேக்குறாரு; அஞ்சாயிரத்துல ஆரம்பிச்சு பலர்கிட்டயும், கரன்சியை கட்டுக்கட்டா வாங்கியிருக்காராம்; இதுவரைக்கும் ஒருத்தருக்கு கூட, இன்னும் லைசென்ஸ் கொடுக்கலையாம். கொடுத்த கரன்சியை என்ன பண்ணுனாருன்னு கடைக்காரங்க துளைச்செடுத்துட்டு இருக்காங்க,'' ஜாஸ்தியாகிருச்சு லஞ்சம்
பில் கொடுத்து விட்டு வெளியே வந்த மித்ரா, ''பத்திரப்பதிவு துறையிலும் லஞ்சம் வாங்குறதை ஜாஸ்தி பண்ணிட்டாங்களாமே...''என, கேட்டாள்.''அதுவா... அன்னுார் லிமிட்டுல இருக்கற சார்பதிவாளர் ஆபீசுல முன்னாடி, வில்லங்கச் சான்று வாங்குறதுக்கு, நகல் எடுக்குறதுக்கு, 100 ரூபாய் லஞ்சம் வாங்குனாங்களாம். இப்போ, 300 ரூபாய் வாங்குறாங்களாம். வில்லங்கச் சான்று வாங்குறதுக்கே, லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கேன்னு 'பப்ளிக்' புலம்புறாங்க,'' கார் திருடும் கும்பல்
''அக்கா, நம்மூர்ல கார் திருடுற கும்பல் ஊடுருவி இருக்குதாம். கார்ல இருக்கற ஜி.பி.எஸ்., கருவியை கழட்டி வீசிட்டு, புது கருவியை மாட்டி, வெளிமாநில கார் விக்கிறவங்களுக்கு தள்ளி விடுதாம். சில சமயங்கள்ல, கார் ஓனரையே கூப்பிட்டு, லட்சக்கணக்குல 'டிமாண்ட்' பேசுறாங்க; கரன்சி கை மாறுனதும் காரை திருப்பித் தர்றாங்களாம்.சென்டிமென்ட் பார்க்குற வி.ஐ.பி.,க்கள், போலீசுல கேஸ் கொடுக்குறதுக்கு தயக்கம் காட்டி, சில லட்சங்களை துாக்கி வீசி, காரை மீட்டுட்டு வர்றாங்களாம்,'' என்றபடி, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் மித்ரா.பின் இருக்கையில் அமர்ந்தாள் சித்ரா.