மேலும் செய்திகள்
பஜாஜ் பல்சர் 150
07-Jan-2026 | 2
ஏற்றுமதியில் மாருதி நம்பர் 1
07-Jan-2026
'பிகாஸ்' ஸ்டார்ட் அப் நிறுவனம், அதன் முதல் உள்நாட்டு தயாரிப்பான 'ஆர்.யு.வி., - 350' என்ற மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. தெற்காசிய நாடுகளில் அதிகம் காணப்படும் ஸ்டெப் த்ரூ ஸ்கூட்டர்களை போன்ற அதே டிசைனில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.கரடுமுரடான சாலைகள், மேடு பள்ளங்கள் உள்ளிட்ட பகுதிகளில் எளிதாக பயணிக்க, 16 அங்குல பெரிய வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, 5 அங்குல டி.எப்.டி., டிஸ்ப்ளே, டர்ன் பை டர்ன் நேவிகேஷன், ப்ளூடூத் வசதி, ஸ்மார்ட் போன் இணைப்பு, க்ரூஸ் கன்ட்ரோல், ஹில் ஹோல்டு, ஆன்ட்டி தெப்ட் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், டிஸ்க் பிரேக்குகளுக்கு பதிலாக டிரம் பிரேக்குகளே கொடுக்கப்பட்டுள்ளன.'மான்' விலங்கை அடிப்படையாகக் கொண்டு இதன் சேசிஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் உலோகம் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும், பிளாஸ்டிக் தரமற்றதாக தெரிகிறது. வினியோகத்தின் போது, இது போன்ற குறைபாடுகள் சரி செய்யப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.விலை: ரூ.1.31 லட்சம் முதல் 1.60 லட்சம்
07-Jan-2026 | 2
07-Jan-2026