பிளம்பிங், எலக்ட்ரிக் லைன் எங்கே? கட்டும்போதே படம் எடுத்துக்கொள்ள வேண்டும்
கட்டடம் கட்டி முடித்தவுடன், பிற்கால பராமரிப்பு அல்லது சிறு, சிறு மாற்றங்களுக்கு, துவக்கத்தில் பயன்படுத்திய பிளம்பர் மற்றும் எல்க்ட்ரீசியனை பயன்படுத்துவது தான் நல்லது.இதுகுறித்து, கொசினா முன்னாள் தலைவர் பாலமுருகன் கூறியதாவது:கட்டடம் கட்டும் பணியில் ஈடுபடும் அனைவருமே முக்கியமானவர்கள் தான். இருப்பினும், கட்டடம் கட்டி முடிந்தவுடன் தொடர்ந்து, பிளம்பர் மற்றும் எலக்ட்ரிசியன் ஆகிய இருவரின் பங்கு முக்கியம். கட்டடத்தின் உட்புறம் அமைக்கும் அனைத்தும் திறம்பட நேர்த்தியாக அமைப்பதால் தான், கட்டடம் சிறப்பாக தொடர்ந்து இருக்கும்; பராமரிப்பு குறையும்.பிளம்பிங் பைப்லைன், தரைதளம், சுவர் பதிப்பு என, அனைத்தும் தக்க வரைபடம் அல்லது புகைப்படம் எடுத்து வைக்க வேண்டும். ஆண்டுகள் கடந்தவுடன், அப்பணிகளை செய்ய ஞாபகம் இல்லாது போகும் சூழல் ஏற்படும். எலக்ட்ரிக் லைன் பைப்கள், ஒவ்வொரு சுவரில் எங்கு செல்கிறது என்று வரைபடம், புகைப்படம், பூச்சு வேலை செய்யும் முன்னே, எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால், மிக தெளிவாக, பிற்காலத்தில் அல்லது உடனே இன்டீரியர் வேலை செய்யும் போது, சுவரில் ஆணி, ஸ்க்ரூ, டிரில்லர் கொண்டு பதிக்கும் போது, இந்த பைப்லைன் பாதிக்காத வகையில் பதிக்க ஏதுவாக இருக்கும்.பிளம்பிங், எலக்ட்ரிக் லைன்கள் எங்கெங்கு உள்ளது, எங்கு செல்கிறது, சேம்பர் எங்கு உள்ளது, அதன் போக்கு எப்படி என்று அறிந்து கொள்வது அவசியம். ஆண்டுகள் பல ஆனாலும், பணி செய்த பிளம்பர், எலக்ட்ரிசியன், அவர்கள் பணி செய்த கட்டடத்தினுள் வரும் போது, கட்டடம் வரவேற்று மகிழும். பிளம்பிங், எலக்ட்ரிக் பணிகளுக்கு மிகவும் அக்கறை எடுக்க வேண்டும். இதனால், பராமரிப்பு குறைந்து, கட்டடத்தின் ஆயுள் அதிகரிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 98420 40433.