மீள்சுழற்சி பயன்பாட்டை அதிகரிக்க உதவும்
பசுமையான மற்றும் மாசு இல்லாத எதிர்காலத்தை நோக்கி நகரும் இவ்வுலகில் 'நெட் ஜீரோ' கட்டடங்கள் ஒரு முக்கியப்பங்கு வகிக்கின்றன. குறைந்த எரிசக்தி பயன்படுத்தி தேவையை பூர்த்தி செய்யும் கட்டடங்கள்தான் 'நெட் ஜீரோ' கட்டடங்கள்.கடந்த சில ஆண்டுகளாக புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். வரும் காலங்களில் புவி வெப்பமயமாதலை தவிர்க்க நெட் ஜீரோ கட்டடங்கள் பெரும் பங்கு வகிக்கும்.காற்று மாசு, கார்பன் வெளியீடு, மின் நுகர்வு குறைக்கப்படும் என்கிறார் 'பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா' கோவை மைய செயற்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன்.அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது...கட்டடங்கள் அதிக அளவிலான வாயுக்களை வெளியிடுகின்றன. உலக மொத்த உமிழ்வுகளில், 50 சதவீதம் கட்டடங்களில் இருந்து வெளிவருகிறது. ஒரு கட்டடம் எவ்வளவு ஆற்றலை உட்கொள்கிறதோ, அதே அளவு ஆற்றலை உருவாக்கி பயன்படுத்தும்போது, அந்த கட்டடம் பசுமை பராமரிக்கும் கட்டடமாக மாறுகிறது.பசுமை குறிக்கோள்களை அடைய ஆற்றல் மிக்க கட்டடங்களை வடிவமைக்க பல காரணிகள் உள்ளன. இடம், சூரிய ஒளி, காலநிலை, காற்றின் வேகம், மழையளவு ஆகிய சில காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். கட்டடத்தில் தேவையான அளவு ஜன்னல்களை அமைக்க, இயற்கை வெளிச்சம் பெறமுடியும்.ஆற்றல் தேவைகளை சரி செய்ய இயற்கை வளங்களை பயன்படுத்துவது ஒரு சிறந்த வழிமுறை. மாசு குறைந்த கட்டுமானம் என்பதால் இயற்கை வளங்களை பாதுகாக்க உதவுகிறது. கார்பன் அடுக்கம் குறைப்பதால் புவி வெப்பமயமாதல் தடுக்கப்படும்.சூரிய சக்தி, காற்றழுத்த சக்தி போன்ற மீள்சுழற்சி ஆற்றல் பயன்பாட்டை அதிகரிக்கும். உலகில் பல கட்டடங்கள் பசுமை கட்டுமான சான்றிதழ்களை பெற்று செயல்படுகின்றன. இந்த 'பாசிவ் டிசைன்' கட்டடமானது இயற்கை ஒளியை அதிகம் பயன்படுத்தும்; கூரை தோட்டங்கள் வாயிலாக காற்றின் தரம் மேம்படும்.கட்டடங்களில் ஆற்றல் மேலாண்மை அமைப்புகள் அவசியமானவை. இவை மின் பயன்பாடு, உற்பத்தியை கண்காணித்து கட்டுப்படுத்த உதவும். காற்றோட்டம் மற்றும் குளிரூட்டும் அமைப்புகள் ஆற்றல் பயன்பாட்டை குறைத்து, வசதியான சூழலை வழங்க அமைக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.