உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / சிறப்பு கட்டுரை / பாதுகாப்பு சாதனங்கள் இருந்தால் பயம் இல்லை!

பாதுகாப்பு சாதனங்கள் இருந்தால் பயம் இல்லை!

''வீட்டில், ELCB (Earth Leakage Circuit Breaker) அமைக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த சாதனங்கள் அமைக்கும் போது, முன்னெச்சரிக்கையாக மின்சாதன பழுதால் ஏற்படும் விபத்துகள் தடுக்கப்படும்,'' என அறிவுறுத்துகிறார், கொசினா முன்னாள் தலைவர் பாலமுருகன்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:ஒரு சிறந்த உள் அலங்காரத்தில் ஒளியின் பங்கு மிகவும் முக்கியம். தற்போது புழக்கத்தில் எல்.இ.டி., விளக்குகள் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. மின் விளக்கின் உபகரணங்கள் வாங்கும் போது, அவற்றின் பயன்பாட்டையும் கவனிக்க வேண்டும். குறிப்பிட்ட அறையின் கலை நுட்பங்களுடன் சேர்ந்து பயன்படுத்துவதாக இருக்க வேண்டும்.அறைக்கு தேவையான தகுந்த வெளிச்சத்துடன் அழகை கூட்டுவதாகவும், பார்ப்பதற்கு எளிமையாகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு அறையிலும் தேவையான ஒளி, ஒவ்வொருவரின் தேவை, விருப்பத்துக்கு ஏதுவாகவும் செயல்பாட்டுக்கு ஏதுவாகவும் இருக்க வேண்டும். ஒரே அறையில் சிலருக்கு பொதுவான ஒளியும், மற்றவர்களுக்கு அதிக ஒளியும், அவரவர் பணிக்கு ஏற்ப தேவைப்படலாம்.இத்தகைய இடங்களில் ஸ்பாட் லைட், ரீடிங் லைட், டவுன் லைட் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இத்தகைய ஒளி அலங்காரம், அக்குடும்பத்தினர் அனைவருக்கும் ஏற்றவாறு அமைக்க வேண்டும். நாம் ஒரு அறையில் ஏற்படுத்தும் ஒளியானது, நமது மனநிலை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம். பயன்படுத்தும் மின்சார ஒளி உபகரணங்கள், பாதுகாப்பானதாகவும், சுலபமாக பயன்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். மின்சார சிக்கனத்துடன் இருக்க கூடிய ஒளியாகவும், பொருளாதாரத்துக்கு ஏற்பவும் அமைய வேண்டும். காரணம், பிற்காலத்தில் மாற்றும் போது சரியான விலையில் இருக்க வேண்டும். சுவிட்ச், கதவின் அருகில் 5 அடி உயரத்தில் அமைக்க வேண்டும். MCB (Miniature Circuit Breaker) அவசியம் அமைக்க வேண்டும்.தற்போது ELCB (Earth Leakage Circuit Breaker) அமைக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த சாதனங்கள் அமைக்கும் போது, மின்சாதன பழுதால் ஏற்படும் விபத்துகள் தடுக்கப்படும். ஏதாவது ஒரு வகையில் மின்சார பாதையில் பழுதோ அல்லது அதிகமான பயன்பாட்டால் விபத்து ஏற்படுவதை அறவே தடுக்க தானாகவே இந்த சாதனம், மின்சாரத்தை உடனடியாக நிறுத்தும். இதனால், விபத்து ஏற்படுவது தடுக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை