உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / சிறப்பு கட்டுரை /  பிளின்த் பீம், கிரேடு பீம், கிரவுண்ட் பீம்; வேறுபாடு என்ன? கட்டுமான செலவை குறைக்க பொறியாளர்கள் ஆலோசனை

 பிளின்த் பீம், கிரேடு பீம், கிரவுண்ட் பீம்; வேறுபாடு என்ன? கட்டுமான செலவை குறைக்க பொறியாளர்கள் ஆலோசனை

நான் தரைதளத்துடன் கூடிய வீடு ஒன்றை கட்டிவருகிறேன். இதில் இரண்டாம் தளத்தின் மொட்டை மாடியில் வரக்கூடிய படிக்கட்டு கூண்டின் உயரம், 10 அடியாக கட்டப்படுகிறது. பல வீடுகளின் படிக்கட்டு கூண்டின் உயரம், 7 அடியாகத் தான் இருக்கும். கூண்டின் போதுமான உயரம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கூறவும்- மணிகண்டன், சிங்காநல்லூர்.நீங்கள் கட்டிவரும் வீட்டின் இரண்டு மாடிக்கு மேலாக, மூன்றாவது தளத்திற்கு மேலே இன்னும் ஒரு மாடி, சில ஆண்டுகளில் கட்ட விரும்புவதாக இருந்தால், கூரையின் உயரம், 10 அடி வைத்துக்கொள்ளலாம். நீங்கள் தற்சமயம் இரண்டு மாடி கட்டி, மேல்மாடி பணியை இத்துடன் நிறைவு செய்கிறீர்கள் என்றால், ஏழு அடி உயரமே போதுமானது.இத்தகைய இடங்களில் நீங்கள், கான்கிரீட்தான் பயன்படுத்த வேண்டும் என்றில்லை. அதற்கு மேல் இலகுவான 'ஜி.ஐ., சீட்' கூரைகள் மற்றும் பல்வேறு கூரை அமைப்புகளும் அமைக்கலாம். அவற்றை மறு உபயோகம் செய்யவும் வாய்ப்புள்ளது.எனவே, கட்டுமானங்களை மேலும் விரிவுபடுத்தும்பொழுது இவற்றை எளிதாக மாற்றி உயரத்தை தேவைக்கு ஏற்ப அமைத்துக்கொள்ளலாம். இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ளும்போது, தங்களுக்கு கட்டுமான செலவு குறையும் என்பதுநிச்சயம்.சாதாரண ஒரு வீட்டை, 'ஜி பிளஸ்' போன்ற அமைப்புதான் சிறந்தது. கார் பார்க்கிங் என்பது அந்த இடத்தின் உத்தேச சூழ்நிலையை பொறுத்து நீங்களே அமைத்துக்கொள்ளலாம். கார் பார்க்கிங் என்று நிறைய இடம் விடுவது என்பது அபார்ட்மென்ட்களுக்கு பொருத்தமானது. வீடுகளுக்கு அது தேவை இல்லை. சாதாரண வீடுகளுக்கு ஜி பிளஸ் ஒன்றுதான் உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும்.அவற்றை வரைபடம் தயாரிக்கும் போது அதிக வாகனங்கள் நிறுத்துமாறு, செலவினங்கள் குறைவாக இருக்குமாறும் பார்த்துக்கொண்டால், இடத்தின் அளவுகள் வீணாகாது. நல்ல அனுபவம் வாய்ந்த பொறியாளர்களை வைத்து திட்டமிடும்போது, நினைக்கும் அளவுக்கு வாகனங்கள் நிறுத்துவதற்கும், வீட்டிற்கும் போதுமான பிளான் அமையும்.தனி வீட்டை பொறுத்தவரை, நீங்கள் சொந்தமாக தொழிலக கூடத்தை கீழ் தளத்தில் நிறுவப்போகிறீர்கள் என்பது இல்லாத பட்சத்தில், ஜி பிளஸ் ஒன்று கட்டுமானமே சிறந்தது.பிளின்த் ஏரியா எவ்வாறு கணக்கிட வேண்டும். தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு விதமாக கணக்கிடப்படுவதாக கூறப்படுகிறது. பிளின்த் பீம்: - தினேஷ் பாபு: பிளின்த் ஏரியா என்பது, 'பிளின்த் லெவல்' மட்டத்தில் கிடைமட்ட வரைபடம் வரைந்தால் கிடைக்கும் மொத்த பரப்பளவு. சுவர்களின் கனம், பரப்பையும் சேர்த்தது பிளின்த் ஏரியா என்பார்கள். பொறியியல் கணக்கில் வெவ்வேறாக கணக்கிட முடியாது. கணக்கிடக்கூடாது. கிரேடு பீம் மற்றும் கிரவுண்ட் பீம் என்பது ஒரு கட்டடம் கட்டப்படும் தரைமட்டத்திற்கு கீழே(300 மி.மீ., ஆழம்) அல்லது தரைமட்டத்திலோ அமைக்கப்படும் தொடர் விட்டம். இது இரு வகைகளில் செயல்படுகிறது.அதாவது, அடிமனையில் உள்ள எல்லா துாண்களையும் இணைத்து கட்டி கிடைமட்ட விசையையும், உயரே எழும் விசையையும் எதிர்த்து தாங்கும் அமைப்பு. இரண்டாவது, தரைதள சுவர்களின் பாரத்தை சீராக அடிமண்ணுக்கு மாற்றும் பணியையும் செய்கிறது.'பிளின்த் பீம்' என்பது, தரைமட்டத்தின் தளமட்ட அளவில், சுவர்களுக்கு கீழே போடப்படும் தொடர் விட்டம். இந்த விட்டம் துாண்களின் உயரத்தையும், சுவர்களின் உயரத்தையும் குறைத்திட உதவுகிறது. இது பெரும்பாலும் பாரம் தாங்கும் கவரமைப்பு கட்டடங்களுக்கு மிகவும் தேவையானது.-மாரிமுத்துராஜ்: உறுப்பினர்: கோயம்புத்துார் சிவில் இன்ஜினியர்கள் சங்கம் (கொசினா)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ