உள்ளூர் செய்திகள்

இணையதளத்தால் சிலையாகும் சிறார்கள்!

'ஆன்லைன்' விளையாட்டு, சமூக வலைதளங்களில் அதிக ஈடுபாடு என்று ஆரம்பித்து, அதற்கே முழுவதும் அடிமையாகி, மன அழுத்தம், தற்கொலை எண்ணம், உடல்நல குறைபாடுகள், படிப்பில் கவனமின்மை போன்றவை ஏற்படுகின்றன.இன்டர்நெட் தவிர, மற்றவற்றில் ஆர்வம் இல்லாமல் இருப்பது மற்றும் உடல் பருமன் ஏற்படுவதற்கு, 'இன்டர்நெட் கேமிங் டிசாடர்' என்று பெயர். குழந்தைகள், வளர் இளம் பருவத்தினரை பாதிக்கும் இப்பிரச்னை, சமீபத்தில் கொரோனா தொற்றை விடவும், மருத்துவ உலகத்திற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்களில் சிலர், எந்த உடல் அசைவும் இல்லாமல், சிலை போல இருப்பதும் உண்டு. இவர்களுக்கு சிகிச்சை தந்து, வெளியில் கொண்டு வருவது, போதைக்கு அடிமையானவர்களை மீட்பதை காட்டிலும் சவாலானது.நம் நாட்டில் 4 வயது குழந்தைகள் கூட, வாரத்தில், 24 மணி நேரம் ஆன்லைனில் விளையாடுகின்றனர். வாரத்தில், 29 மணி நேரம் இணைய தளத்தில் விளையாடும் குழந்தை, படிப்பில் கவனம் இல்லாமல் இருக்கும்.இது, சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்பட்டதை விடவும் மூன்று மடங்கு அதிகம்.- குளோபல் பீடியாட்ரிக் ஹெல்த்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !