துரியன் நன்மைகள்
துரியன் பழத்தை சாப்பிட்டால், உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். பழங்கள் மட்டுமின்றி, இலைகளும் பல மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. இப்பழங்களை சாப்பிட்டால், உடலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ற கருத்தும் உள்ளது. துரியன் பழம் சாப்பிடுவதால், உடலில் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதாக கூறுகின்றனர். அளவாக சாப்பிட்டால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். துரியன் பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் உள்பட பல சத்துக்கள் நிறைந்துள்ளது. வாழைப்பழத்தை விட, 10 மடங்கு அதிக இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது.