சர்க்கரை நோய் தடுக்கும் உணவு
முழுதானிய உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முழுதானியத்தில் உள்ள தவிடு மற்றும் நார்ச்சத்தானது, செரிமான என்சைம்களை மட்டுப்படுத்தி, உணவு உடனடியாக செரிமானமாவதை தாமதப்படுத்துகிறது. இதன் வாயிலாக, சர்க்கரை ரத்தத்தில் கலக்கும் வேகத்தைக் குறைக்கிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை சிறிது, சிறிதாகவே சேகரமாவதால் இன்சுலினின் வேலைப்பளு குறைகிறது. முழுதானியங்களில் தாது உப்புக்கள், வைட்டமின்கள் மற்றும் இதரச் சத்துக்கள் நிறைந்துள்ளதால், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை தடுக்கிறது. பிரட், வெள்ளை அரிசி சாதம், உருளைக்கிழங்கு மிக விரைவாக ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்பவை. இதனால் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.