பசுமை தரும் மஞ்சள் பால்!
ஜலதோஷம், சளி, தலைவலி போன்ற பிரச்னை வந்தால், பசும்பாலில், மஞ்சள், தூள், மிளகு தூள் ஆகியவற்றை கொதிக்க வைத்து குடிப்பது வழக்கத்தில் உள்ளது. இதனால், நோய் பிரச்னைகள் தீர்ந்து புத்துணர்வு கிடைக்கும். வாரத்தில் ஒரு நாள் மஞ்சள் தூள் கலந்த பாலை பருகி வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.இதற்கு காரணம் மஞ்சள் மற்றும் பால் இவற்றுக்கு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி பண்புகள் உண்டு. நம் அன்றாட உணவில் இந்த இரண்டு இயற்கை பொருட்கள் நோயை தடுப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.பாலில் மஞ்சள் சேரும் போது பல மருத்துவ பயன்கள் கிடைக்கின்றன. அபாயகரமான சுற்றுச்சூழல், நச்சுகள் மற்றும் தீங்கு செய்யும் நுண்ணுயிரிகள் போன்றவைகளை அழிக்கும் தன்மை மஞ்சளில் உள்ளது. சுவாச அமைப்பு, மசாலா மற்றும் உடல் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புக்கு, விரைவான நிவாரணம் வழங்கி, உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.குடலுக்கு சுகாதாரம்: மஞ்சள் பால் குடிப்பதால் மார்பக புற்றுநோய் வராது. தோல், நுரையீரல், புரோஸ்டேட், மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களின் வளர்ச்சியை எதிர்த்து போராடும். புற்றுநோய் செல்களை தடுக்கும் மற்றும் கீமோதெரபியினால் ஏற்படும் பக்க விளைவுகள் குறைத்து நலம் தரும்.மஞ்சள் பாலை குடித்து வந்தால் கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் காரணமாக ஏற்படும் வீக்கத்தை குணப்படுத்த முடியும். குளிர் மற்றும் இருமலுக்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்து போராடும் மருத்துவ குணம் கொண்டுள்ளது சக்தி வாய்ந்த கிருமி நாசினியாக இருப்பதால், குடல் சுகாதாரத்தை ஊக்குவிக்கிறது. வயிற்றுப்புண்களையும், பெருங்குடல் அழற்சியையும் கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, வயிற்றுப்புண்கள், வயிற்றுப் போக்கு மற்றும் அஜீரணத்தையும் தடுக்கிறது.சருமத்துக்கு பளபளப்பு: காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் பால் குடித்தால், வயிற்று புண் ஆறும். மிளகு தூள் கலந்து குடித்தால், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும். மஞ்சள் கலந்த பால் கீழ்வாதத்தை குணமாக்கும். முடக்கு வாதத்தால் உண்டாகும், வீக்கத்தையும் குறைக்கும். தசை, எலும்புகளில் ஏற்படும் வலியைக் குறைத்து வளைவுத் தன்மையை அதிகரிக்கும். முதுகுத்தண்டு மற்றும் மூட்டுகளை உறுதிப்படுத்தும். இதை, தினமும் குடித்து வந்தால், சருமம் பளபளப்பாகும்.பைட்டோஈஸ்ட்ரோஜெனை உற்பத்தி செய்து, ஹார்மோன் குறைபாடுகளை சரிசெய்ய உதவும். அத்துடன் பெண்களின் கர்ப்பம் தொடர்பான பிரச்னைகளையும் குணப்படுத்தும். மஞ்சளுக்கு வலியைக் குறைக்கும் தன்மை அதிகம் இருப்பதால், மாதவிடாய் காலங்களில் வரும் கடுமையான வயிற்று வலியைத் தடுக்கும். கருவுற்ற பெண்கள் கர்ப்ப காலத்தில் தொடர்ந்து மஞ்சள் கலந்த பாலைக் குடித்து வருவது நல்லது.ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் அளவுக்கு மேல், இதை குடிப்பதை தவிர்க்க வேண்டும். இந்தப் பாலை அளவுக்கு அதிகமாகக் குடித்தால், சிலருக்கு உடல் உஷ்ணமாகி வயிற்றுப்போக்கு, தலைவலி, ஏப்பம், அஜீரணம், பித்தப்பைச் சுருக்கம், நெஞ்செரிச்சல் ஆகியவை உண்டாகலாம். எனவே, தேவையான அளவு குடித்தால் உடலுக்கு, மேற்சொன்ன நன்மைகள் தாராளமாக கிடைக்கும்.