ஆரோக்கியம் காக்கும் கரிசாலை கற்ப சூரணம்
கரிசலாங்கண்ணி மூலிகையை வேருடன் எடுத்து, சுத்தம் செய்து, நிழலில் உலர்த்தி, நன்றாக காய்ந்ததும் சலித்து, அதன் விதைகளை நீக்கி சுத்தம் செய்த பின், காய்ந்த சுரைக் குடுவையில் போட்டு நிரப்பி விட வேண்டும். சுரைக் குடுவையின் வாயை மூடி அல்லது மூங்கில் குச்சி கொண்டு காற்று புகாமல் மூடி, 40 நாட்கள் வைத்திருக்க வேண்டும். அதன் பின், இச்சூரணத்தை தினசரி 2 -- 4 கிராம் அளவு எடுத்து, காய்ச்சிய பாலில் கலந்து, காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.இதை மூன்று வயது குழந்தைகள் தொடங்கி, அனைவரும் பயன்படுத்தலாம். சுத்தமான, புதிய தேனில் குழைத்து உண்டால் இன்னும் சிறப்பு. இந்த மூலிகையில், வைட்டமின் ஏ, பி, சி, டி, ஈ, கே, பி வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ் இரும்பு, மெக்னீசியம், தாமிரம், துத்தநாகம், சோடியம், பொட்டாசியம் என அனைத்து தாதுக்களும் உள்ளன. உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கி, புத்துணர்ச்சி தரும்.டாக்டர் சா.காமராஜ், முன்னாள் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், திருச்சி0431-2300181, 94898 20113drkaamaraaj@gmail.com