உள்ளூர் செய்திகள்

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: வீட்டு சாப்பாடு தான் பெஸ்ட்!

'ஜிம்'மில் வியர்வை சிந்தினாலும், உடல் எடை குறைய மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதா... அப்படியென்றால், நீங்கள் சாப்பிடும் உணவில் உள்ள கார்போ ஹைட்ரேட் தான் காரணம்.உடல் பருமனுக்கு பிரதான காரணம், முறையான உடல் பயிற்சி செய்யாதது அல்ல; ஊட்டச் சத்தில்லாத, நம் உடலுக்கு தேவையில்லாத அதிக கலோரி உள்ள உணவுகள். உதாரணமாக, பாட்டிலில் அடைக்கப்பட்ட, 200 மி.லி., காற்றூட்டப்பட்ட குளிர் பானத்தில், 150 கலோரி உள்ளது. இதை தினமும் குடித்தால், 'டைப் - 2' நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு, 11 மடங்கு அதிகம். வீட்டில் அரைத்த மாவில் செய்த இட்லி; வீட்டிலேயே உறைய வைத்த தயிர்; புடலங்காய், பீர்க்கங்காய் உட்பட நாட்டு காய்கள்; கொய்யா, மாதுளை என, அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்கள்; ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்றால், வீட்டிலேயே செய்த பாயசம்; ஆன்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ள ஓமம், வேப்பிலை; சமையலுக்கு செக்கில் ஆட்டிய எண்ணெய் என, ஒரு மாதத்திற்கு சாப்பிட்டு பாருங்கள். ஜிம்மிற்கு போகாமலேயே உடல் எடை சீராக குறைய ஆரம்பிக்கும்.டாக்டர் தாரிணி கிருஷ்ணன்,வெல்னஸ் கிளினிக், சென்னை. dhar.krish@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !