உள்ளூர் செய்திகள்

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - டில்லி, மஹாராஷ்டிரா முன்னுதாரணம்!

குழந்தை, வளர் இளம் பருவத்தினர், உடல் பருமனுடன் இருப்பது, உலகம் முழுவதும் பெரிய பிரச்னையாகி விட்ட நிலையில், 2020ல் தடுக்க கூடிய நோய்கள் பட்டியலில், உடல் பருமன் முதலிடத்திற்கு வரப் போவதாக, உலக சுகாதார மையம் தெரிவித்து உள்ளது. இதுவரையிலும், புகை பிடிப்பதால் வரும் உடல் பிரச்னைகள் தான், முதலிடத்தில் இருந்தன.விழிப்புணர்வுஇப்பிரச்னையை புரிந்து, இளம் தலைமுறையினரை இதிலிருந்து வெளியில் கொண்டு வருவதற்கான முனைப்புடன், பல நடவடிக்கைகளை, உலக நாடுகள் எடுத்து வருகின்றன. இந்தியாவைப் பொருத்தவரை, மஹா ராஷ்டிரா, டில்லி அரசு கள், முனைப்புடன் செயல்படுகின்றன. 'உடல் பருமன் ஒரு நோய்' என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதில், இரண்டு அரசுகளும் செயல்படும் விதம், நாட்டிற்கே முன்னுதாரணமாக விளங்குகிறது.தென் மாநிலங் களில், சென்னை, ஐதராபாத், பெங்களூரூ போன்ற மெட்ரோ நகரங்களில், உடல் பருமனைக் குறைக்க முயற்சிகள் செய்யாவிட்டாலும், குறைந்த பட்சம், 'இது பிரச்னை' என்ற விழிப்புணர்வாவது இருக்கிறது; மற்ற இடங்களில் அது கூட இல்லை.'ஆன்லைனில்' உணவு, 'ஆர்டர்' செய்யும் வசதி வந்த பின், நினைத்ததை வாங்கிச் சாப்பிட முடிகிறது. வாரத்திற்கு ஒரு நாள், விருந்து சாப்பிட்டவர்கள், தற்போது, தினமும் சாப்பிடுகின்றனர். அலுவலகம் செல்பவர்கள், குறிப்பாக, மென் பொருள் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள், தினமும், குறைந்தது இரண்டு வேளையாவது, வெளியில், 'ஆர்டர்' செய்து சாப்பிடுகின்றனர்.முதலிடம்முன்பெல்லாம், வெளியில் சாப்பிடப் போவதே திருவிழாவாக இருந்தது. திட்ட மிட்டு, எல்லாருக்கும் வசதியான ஒரு நேரம் பார்த்து, தயாராகி, வாகனத்தைப் பிடித்து, எந்த உணவகத்தில், என்ன சாப்பிடலாம் என்று முடிவு செய்து, சாப்பிடப் போக வேண்டும் என்றாலே, பல நேரங்களில் அலுப்பாகி, திட்டத்தை தள்ளிப் போட்டோம். ஆனால், தற்போது, உணவகங்கள் வீட்டிற்கே வந்து விட்டன. இந்த வசதிகள் வருவதற்கு முன்பே, உடல் பருமனில், இந்தியா முதலிடத்தில் தான் இருந்தது.டாக்டர் ஜெகதீஷ் சந்திர போஸ்,'பேரியாட்ரிக்' அறுவை சிகிச்சை நிபுணர், மதுரை. 0452 - 4263000/0452 - 2543000


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்