உள்ளூர் செய்திகள்

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - தெரிந்தே செய்த தவறு!

நான் டாக்டராக இருப்பதாலேயே, நீரிழிவு கோளாறுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை, என் உடல் உருவாக்கிக் கொள்ளாது என்பதை அனுபவத்தில் புரிந்து கொண்டேன். மூன்று ஆண்டுகளுக்கு முன், என்னிடம் ஆலோசனைக்கு வரும் நோயாளிகளிடம், 'அதிக உடல் எடை ஆபத்து, குறைக்க வேண்டும்' என்றால், பல நோயாளிகள் என்னை பார்த்த பார்வை வெட்கமாக இருந்தது. 5 அடி 11 அங்குல உயரம் உடைய என் எடை அப்போது, 100 கிலோ.ஆறு ஆண்டுகளுக்கு முன், அதீத சர்க்கரை, உயர் ரத்த அழுத்தத்தினால், என் அம்மா படுத்த படுக்கையானார். அவரின் இடது பக்கம் முழுவதும் பக்கவாதத்தால் செயலிழந்து விட, என் டாக்டர் தொழிலை விட்டு, முழு நேரமும் அம்மாவை கவனிக்க வேண்டிய சூழல். அம்மாவுக்கு சாப்பாடு ஊட்டுவது, துணி மாற்றுவது, துடைத்து விடுவது என்று எல்லாம், என் தலையில் தான். தினமும் அதிகாலை, 3:00 மணிக்கு எழுவேன். தினமும் பீட்சா, பர்கர், சிக்கன் கிரேவி என்று வெளியில் உணவு வரவழைத்து சாப்பிட்டேன். காபி, டீயில் தினமும் சேர்த்த வெள்ளைச் சர்க்கரை, 13 டீ ஸ்பூன். உதவிக்கு யாரும் இல்லை. மன அழுத்தம் வந்தது. அம்மா இறந்த பின், வேலையில் மீண்டும் சேர்ந்தேன். மன அழுத்தம், துரித உணவு, வெள்ளை சர்க்கரை எல்லாம் சேர்ந்து, என் உடல் எடையை அதிகரித்தது.நீரிழிவு சிறப்பு டாக்டரான எனக்கு, நீரிழிவும், ரத்தக் கொதிப்பும் வந்தது. முதலில் வெள்ளைச் சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், மைதா, இவற்றை தவிர்த்தேன். மாலை, 5:30 முதல் காலை, 8:30 வரை எதுவும் சாப்பிட மாட்டேன். உடற்பயிற்சியும், தசைப் பயிற்சியும் தலா, 30 நிமிடங்கள் செய்கிறேன். 25 கிலோ குறைத்துள்ளேன்.டாக்டர் திரிபுவன் குலாதிகுலாதி நீரிழிவு மையம், புதுடில்லி.doctor tribhuvan1508@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !