குரங்கு அம்மையை தடுக்கும் அம்மை தடுப்பூசி!
'ஆர்த்தோ மிக்சோ' வைரசால், குரங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவக் கூடியது, குரங்கு அம்மை. நம் நாட்டில் வெளிப்படையாக தெரியக் கூடிய அளவுக்கு, குரங்கு அம்மையின் தாக்கம் இதுவரையிலும் இல்லை; வெளிநாடுகளில் இருக்கிறது.இது, புதிய தொற்று நோய் இல்லை. காங்கோ போன்ற ஆப்ரிக்க நாடுகளில் அதிகம் உள்ளது. அம்மை கொப்புளங்கள் போன்று உடல் முழுதும் வருகிறது. வைரஸ் பாதித்த 6 - 11 நாட்களில் காய்ச்சல், தலைவலி, நிணநீர் கட்டிகள் வீக்கம், முதுகுவலி, தசைவலி, உடல் சோர்வு போன்றவை தோன்றும். ஐந்தாவது நாளில், தோலில் சிவப்பு தடிப்புகள் தோன்றி, சின்னம்மை, பெரியம்மை போல கொப்புளங்களாக மாறும்; அறிகுறிகளை வைத்தே சிகிச்சை தரப்படுகிறது.நம் நாட்டில், பெரும்பாலான டாக்டர்களுக்கு இந்நோய் பற்றிய அனுபவம் கிடையாது. ஏற்கனவே அம்மைக்கான தடுப்பூசி போட்டிருந்தால், குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பு வராது என்றும் சொல்லப்படுகிறது.டாக்டர் பி.சேகர், குழந்தைகள் நல மருத்துவர்,செங்கல்பட்டு