உள்ளூர் செய்திகள்

மனநலம் - இத்தாலி, ஸ்பானிஷ் கற்பது எளிது!

என் கிளினிக்கிற்கு வருபவர்களில், தினமும் ஒருவராவது, 'டிஸ்லெக்சியா'- குறித்து கேட்கத் தவறுவதில்லை. 'உங்கள் குழந்தை வகுப்பறையில் கவனிப்பதில்லை. போர்டில் எழுதிப் போடுவதை தவறாக எழுதுகிறான்' என்ற டீச்சரின் புகாரைத் தொடர்ந்து ஏற்படும் சந்தேகம் இது.தொடர்ந்து, இது போன்ற புகாரை கேட்கும் பெற்றோருக்கு, கற்றுக்கொள்வதில் நம் குழந்தைக்கு ஏதேனும் பிரச்னை இருக்குமோ என்ற சந்தேகம், இயல்பாகவே வருவதை தவிர்க்க முடிவதில்லை. அதேநேரத்தில், இந்த சந்தேகம் மிகையானது என்று ஒதுக்கிவிடவும் முடியாது.டிஸ்லெக்சியா எனப்படும், கற்றல் குறைபாடு பொதுவான விஷயம். 2 முதல் 7 சதவீத குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது. பெண் குழந்தைகளை விடவும் ஆண் குழந்தைகள் தான், இந்தப் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். டிஸ்லெக்சியா குறித்து உலகம் முழுவதும், மருத்துவரீதியாக நிறைய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால், இதனால் தான் கற்றல் குறைபாடு வருகிறது என்று, இன்னும் உறுதியாக சொல்ல முடிவதில்லை. மரபியல் காரணிகளும், சுற்றுச்சூழலும், டிஸ்லெக்சியா வருவதற்கு மிக முக்கியமான காரணம் என்று, ஓரளவு உறுதியாக சொல்ல முடியும். பொதுவாக, நம்முடைய இடது பக்க மூளை தான் மொழியை கற்றுக்கொள்வதற்காக செயல்படுவது. டிஸ்லெக்சியா குறைபாடு இருப்பதற்கு, இந்த இடது பக்க மூளையின் செயல்பாடு குறைவாக இருப்பதும் ஒரு காரணம்.எப்படி கண்டுபிடிப்பது?பேப்பரில் எழுதிய எழுத்தை கண்ணாடியில் பார்த்தால் எப்படி இருக்கும்? எல்லாமே தலைகீழாகத் தெரியும் இல்லையா! அதேபோல தான் டிஸ்லெக்சியா குறைபாடு இருந்தால், 'மிரர் இமேஜ்' போல தான் இவர்களுக்கு எழுத்துகள் தெரியும். டிஸ்லெக்ஸ்சியா குறைபாடு இருந்தால் ஆங்கிலம், பிரெஞ்ச், சீன மொழிகளை கற்றுக்கொள்வதற்கு மிகவும் சிரமப்படுவர்; ஆனால், இத்தாலி, ஸ்பானிஷ் மொழிகளை, இவர்களால் எளிமையாக கற்றுக்கொள்ள இயலும்.பொதுவாகவே பள்ளியில் சேர்ந்தவுடன் படிப்பதற்கு, எழுதுவதற்கு, வாசிப்பதற்கு சிரமப்படுவதைப் பார்த்து, பிரச்னை உள்ளதா என்பதை கண்டுபிடித்து விடலாம். 3 வயதில் பள்ளியில் குழந்தை சேரும்போது, அதன் நடவடிக்கைகளை வைத்தே கண்டுபிடிப்பது சுலபம்.இது போன்ற குழந்தைகளை, 'ஹைபர் ஆக்டிவிட்டி' என்று கூறுவர். அதாவது, ஒரு இடத்தில் நிற்காமல் துறுதுறுவென, எதையாவது செய்து கொண்டிருப்பர். எழுத்துகளை புரிந்து கொள்ள சிரமப்படுவதால், கவனம் அதில் இல்லாமல் வேறு எங்கேயோ இருக்கும். பிரச்னை இருக்கிறது என்பதை பெரும்பாலும் பெற்றோரும், ஆசிரியர்களும் புரிந்து கொள்ளாமல், 'மூளை தான் இருக்கே, ஏன் எழுத மாட்டேங்குறே?' என்று கேட்கும்போது மனரீதியாகவும் அது குழந்தைகளை பாதிக்கும். என்ன தீர்வு?டிஸ்லெக்சியா குழந்தைகள் எழுத்துகளை எளிதாக புரிந்து கொள்ள வசதியாக, அவர்களுக்கு பிரத்யேக எழுத்துருவில் கையேடுகள் உள்ளன. இதை வைத்து முறையாக பயிற்சி தந்தால், இந்த குறைபாட்டிலிருந்து எளிதாக அவர்களை வெளியில் கொண்டு வந்துவிடலாம். எவ்வளவு சீக்கிரம் டிஸ்லெக்சியா பிரச்னையை உணர்ந்து, பயிற்சி தருகிறோமோ, அவ்வளவு நல்லது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு!டாக்டர் லட்சுமி விஜயகுமார்மனநல சிறப்பு மருத்துவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !