உள்ளூர் செய்திகள்

கேள்வி - பதில்கள்

தோல் சிகிச்சை:

எனக்கு தோல் எப்பொழுதும் வறட்சியாகவே காணப்படுகிறது. இதற்கு தினமும் நான் கை, கால் மற்றும் முகத்தில் தேங்காய் எண்ணெயை தேய்த்துக் கொள்கிறேன். இதற்கு என்ன செய்வது? வாசுகி, சென்னை.

ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் வறட்சியை நீக்கக்கூடியது. கஜிதபிண்டத் தைலம், குங்கிலிய வெண்ணெய், குங்கிலிய தைலம் போன்றவற்றையும் தடவி வரலாம். வறட்சியை அதிகப்படுத்தும் குளிர்ச்சியான உணவுகளைதவிர்ப்பது நல்லது.

சோரியாசிஸ் தொற்று நோயா? செபஸ்டின், குனியமுத்தூர்.

செபஸ்டின், குனியமுத்தூர்.சோரியாசிஸ், தொற்று நோய் அல்ல. இந்நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை தொடுவதாலோ, அவர் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்துவதாலோ, நோய் பரவாது. எனவே சோரியாசிஸ் நோயாளிகளை ஒதுக்க வேண்டாம்.சுத்தம் இல்லாததால் தான் சோரியாசிஸ் வருகிறது. தவறு.

நோய் எதிர்ப்புதன்மையில் ஏற்படும் கோளாறு காரணமாக இந்நோய் வருகிறது. இதற்கும் சுத்தம், சுகாதாரத்துக்கும் தொடர்பில்லை. ஆனால், நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தோலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் தோலில் எளிதில் கிருமி தொற்று ஏற்படும். சுத்தம் ஆரோக்கியத்தின் அடித்தளம்.

-டாக்டர் ஜெய வெங்கடேஷ், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !