உள்ளூர் செய்திகள்

கேள்வி - பதில்

உணவிற்கு முன், உணவிற்கு பின் எந்த மாதிரியான பழங்கள் சாப்பிடுவது நல்லது? சிவப்பாக இருக்கும் மாதுளம் பழத்தை சாப்பிடக் கூடாது என்று சொல்லப்படுவது உண்மையா?எஸ்.ரேகா, மதுரைபொதுவாகவே, எல்லாப் பழங்களிலும் வைட்டமின் மற்றும் தாதுக்கள் போன்ற உடலுக்கு மிக அவசியமான, நுண்ணுாட்டச் சத்துகள் அதிகம் உள்ளன. அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்கள் எதுவாக இருந்தாலும், தாராளமாகச் சாப்பிடலாம். உணவுக்கு முன், உணவிற்கு பின் சாப்பிடும் பழங்கள் என்றெல்லாம் வகைப்படுத்தத் தேவையில்லை. அப்படி எதுவும் கிடையாது. அதுபோல சிவப்பு நிறத்தில் உள்ள மாதுளம் பழத்தை சாப்பிடக் கூடாது என்று சொல்வதும் தவறு. இயற்கையாக பழங்களில் உள்ள சத்துகள் முழுமையாக உடலுக்கு கிடைக்க வேண்டும் என்றால், சமைத்த உணவை சாப்பிடுவதற்கு குறைந்தது அரை மணி நேரம் முன் அல்லது சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு பின், பழங்கள் சாப்பிடலாம். பழங்கள் செரிமானம் ஆவது எளிது. ஆனால் சமைத்த உணவு செரிமானம் ஆவது கடினம். இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடும்போது, பழங்களில் உள்ள சத்துகள், உடலுக்கு முழுமையாக கிடைக்காமல் போகலாம். உணவு செரிமானம் ஆவதற்கு மீத்தேன் உட்பட, ஐந்து பிரதான வாயுக்கள் வயிற்றில் சுரக்கும். பழங்களையும் சமைத்த உணவையும் சேர்த்து சாப்பிடும் போது, வாயுக்கள் சுரப்பது வழக்கத்தை விடவும் அதிகமாக இருக்கும். சுபத்ரா சுந்தர்ஊட்டச்சத்து நிபுணர், கங்கா மருத்துவமனை, கோவைஇசை மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியுமா? பலவித நோய்களுக்கும் இசைத்தட்டுகள் நிறைய வந்துள்ளனவே! இது எந்த அளவிற்கு பலன் தரும்?க.பிரபாவதி, கடலூர்குறை பிரசவத்தில் பிறந்து, 'அஸ்பெரஸ் சிண்ட்ரோம்' என்ற நரம்பு தொடர்பான பிரச்னை உள்ள குழந்தை, இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் என, பலதரப்பட்ட உடல் பிரச்னைகளையும் மியூசிக் தெரபி மூலம் குணப்படுத்தி உள்ளோம். மூளையில் சுரக்கும் அமிலங்களின் சீரற்ற தன்மையால் ஏற்படும் மன நோய்களையும், குணப்படுத்தி உள்ளோம். பல நேரங்களில் சாப்பிடும் மருந்து மாத்திரைகளை நிறுத்தச் சொல்லாமல், அதோடு மியூசிக் தெரபியையும் சேர்த்தே தருவோம். இசை, மூளையில் அதிர்வை ஏற்படுத்துவது அவசியம் என்பதால் வீணை, வயலின் போன்ற கம்பி இசைக் கருவிகளின் இசையை மட்டுமே மியூசிக் தெரபியில் பயன்படுத்துகிறோம்.வெறும் மருந்து மாத்திரைகள் மூலம் கிடைக்கும் பலனைவிட இது அதிகம். உடல், மனப் பிரச்னை இருப்பவர்கள் மட்டுமல்ல; ஆரோக்கியமாக இருப்பவர்களும், சிதைக்காத, பாரம்பரியமான இசையைக் கேட்கலாம். அது உங்களை எப்போதும் உற்சாகமாக வைக்கும்.டாக்டர் மைதிலிஅப்பல்லோ மருத்துவமனை, சென்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !