ஒரு மணி நேரம் ஒரே இடத்தில் உட்காருவது ஆபத்து!
கர்நாடக மாநிலத்தின் குறிப்பிட்ட மாவட்ட கலெக்டர் எனக்கு போன் செய்தார். டாக்டர் எனக்கு பைல்ஸ் (piles) பிரச்னை உள்ளது. இந்த விஷயம் தெரிந்தால், கலெக்டருக்கு பைல்ஸ் என்று மாவட்டமே கேலி செய்து சிரிக்கும். வாடகை காரில் பின் பக்க வாசல் வழியாக வருகிறேன், என்றார். பெருங்குடல், மலக்குடலில் எற்படும் பைல்ஸ் (மூல நோய்), நாள்பட்ட புண், எரிச்சல், ரத்தக் கசிவு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளை வெளிப்படையாக பேசவே தயங்குகிறோம்.பிரச்னை பெரிதாகி, தாங்கவே முடியாத வலி வந்த பின்பே சிகிச்சைக்கு வருகின்றனர். இதில் இன்னொரு தரப்பு, இது போன்ற பிரச்னைகளுக்கு முதலில் போலி டாக்டரிடம் சென்று உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்பட்ட பின்பு என்னிடம் வருகின்றனர்.நம் நாட்டில், பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையங்களில், பௌத்ரம் ஒரே நாளில் தீர்வு என்று போஸ்டர் ஒட்டி, 15 லட்சம் போலி டாக்டர்கள் சிகிச்சை செய்வதாக ஐரோப்பிய மருத்துவ இதழ் ஒன்றில் கட்டுரை வெளியாகி உள்ளது. என்னுடைய மருத்துவமனையை சுற்றிலும் 25 போலி டாக்டர்கள் இருக்கின்றனர்.இவர்களின் சிகிச்சை முறை வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு கொடூரமாக உள்ளது. மலத்தில் ரத்தம், ஒருநாள் இயல்பாக மலம் கழிப்பது, அடுத்த நாள் வயிற்றுப் போக்கு, மலத்தில் சளி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மாறி, மாறி வருவது போன்ற அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவ ஆலோசனை அவசியம்.எப்படி தவிர்க்கலாம்?எந்த விலங்கிற்கும் பைல்ஸ் வருவதில்லை. ஒரே இடத்தில் அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்கு மேல் உட்காரக் கூடாது. ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடக் கூடாது. சிரமப்பட்டு மலம் கழிப்பது கூடாது.மொபைல் போன் பார்த்தபடி அதிக நேரம் கழிவறையில் அமர்ந்திருந்தால், புவியீர்ப்பு விசை காரணமாக மலச்சிக்கலை அதிகப்படுத்தி, பைல்ஸ் வரலாம்.தசைகளை வலுப்படுத்த ஜிம் பயிற்சியோடு, புரத சப்ளிமென்ட் அதிக அளவில் சாப்பிடுகின்றனர்.இதனால் பைல்ஸ் உண்டாவது மட்டுமல்ல, மொத்த உடல் செயல்பாட்டிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக செரிமான மண்டலத்தின் செயல்பாட்டைக் மிதமாக்கும்.நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது அவசியம். பெருங்குடல், மலக்குடல் பிரச்னைகள் நம் நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய மிகப் பெரிய சவாலாக உள்ளது. அதனால் தான் பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கு இலவசமாக சிகிச்சை செய்கிறேன்.டாக்டர் பரமேஸ்வரா சி.எம்., குடல், இரைப்பை சிறப்பு மருத்துவர்,ஸ்மைல் மருத்துவமனை,பெங்களூரு9513446023operations@smileshospitals.com