மெல்ல மெல்ல வைரஸ் குறையும்!
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, புதிதாக சூயிங்கம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தாவரத்தில் இருந்து எடுக்கப்படும், 'ஏசி ஈ 2' என்ற புரதத்தை மூலப் பொருளாக வைத்து இது தயாரிக்கப்பட்டுள்ளது.இதை மெல்லும் போது, உமிழ் நீரில் வைரஸ் கிருமி இருந்தால், அதை அடையாளம் கண்டு அழித்து விடும். இது உமிழ் நீரை சமன்படுத்தி, அதில் உள்ள கிருமிகளை அழிப்பதால், தொற்று பரவல் வெகுவாக குறையும் என்று கூறப்படுகிறது. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த, இவ்வகை தாவர புரதம் உதவுமா என்று ஆராய்ச்சி செய்யப்பட்டது.கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உயர் ரத்தம் அழுத்தமும் உள்ள சிலருக்கு, புதிய சூயிங்கம் தந்து பரிசோதித்த போது, ஆர்.என்.ஏ., வைரஸ் வெகுவாக அழிந்தது தெரிய வந்தது. மக்கள் பயன்பாட்டிற்கு முன், முறையான, 'ட்ரையல்' செய்வதற்கு அனுமதி கோரப்பட்டு உள்ளதாக, பென்சில்வேனியா பல்கலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.- மாலிகுலார் தெரபி