உள்ளூர் செய்திகள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

ஆஸ்துமா என்றால் என்ன?நீண்ட காலமாக இருக்கும் ஒவ்வாமையால், நுரையீரல் மற்றும் சுவாசக் குழாயில் ஏற்படும் அழற்சி காரணமாக சளி பிடிந்து ஏற்படும் மூச்சு இழுப்பு.ஆஸ்துமாவில் வகைகள் உள்ளதா?உள் இயல்பான ஆஸ்துமா, புறவழி ஆஸ்துமா, மருந்துகளால் ஏற்படும் ஆஸ்துமா, தொழில் வகையால் ஏற்படும் ஆஸ்துமா என, நான்கு வகைப்படும்.இயல்பான ஆஸ்துமா, புறவழி ஆஸ்துமா வரக் காரணம்?இயல்பான ஆஸ்துமா குழந்தை பருவத்திலேயே வரக் கூடியது. பரம்பரை காரணங்களால் வரலாம். குறிப்பாக பெண்களையே அதிகம் பாதிக்கும். வெளி பொருட்களால் ஏற்படும் ஒவ்வாமையால் வரக் கூடியது, புறவழி ஆஸ்துமா. இது அதிகமாக, ஆண்களையே பாதிக்கும்.மருந்துகளால் ஏற்படும் ஆஸ்துமா, தொழிலால் ஏற்படக் கூடிய ஆஸ்துமா எவ்வாறு ஏற்படுகிறது?* உடல் பிரச்னைகளுக்கு சாப்பிடும் மருந்துகள், சில நேரங்களில், நுரையீரலில் ஒவ்வாமையை ஏற்படுத்தும். அப்போது ஆஸ்துமா வருகிறது. உடல் எடை, மருந்தின் அளவு மற்றும் பொருட்களின் தன்மையை பொருத்து, ஆஸ்துமாவின் தாக்கம் இருக்கும். * பஞ்சாலை, கால்நடைப் பண்ணை, புகைப்படம் எடுக்கும் இடம், பிளாஸ்டிக், சாயத் தொழிற்சாலைகளில் அதிக தூசியும், மாசும் இருப்பதால், இங்கு பணி செய்வோருக்கு, தொழிலால் ஏற்படும் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுகின்றனர்.இதன் அறிகுறிகள் என்ன?மூச்சுத் திணறல், அதீத இருமல், தூக்கமின்மை, நெஞ்சில் வலி, இறுக்கம் போன்றவை பொதுவான அறிகுறிகள்.மரபியல் காரணங்களால் ஆஸ்துமா வர வாய்ப்புள்ளதா?வாய்ப்புகள் உண்டு. ஒவ்வாமை, சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசுக்கள், தொழிற்சாலை கழிவுகள், நுரையீரல் மற்றும் சுவாசக் குழாய்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்துவது தான் முக்கிய காரணம்.எந்த வயதில் இதன் பாதிப்பு அதிகம்?குறிப்பிட்ட வயது வரம்பு ஏதும் இல்லை. குழந்தைகளை கூட தாக்கும். 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு காற்றில் காணப்படும் தூசிகள், நுண்ணுயிர்கள் மூலம் இந்நோய் ஏற்படலாம். இதோடு புகை பிடித்தல், குளிர்ந்த காற்றின் தாக்கம், மன அழுத்தத்தாலும் ஆஸ்துமா வரலாம்.ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் செய்ய வேண்டியது என்ன?தூசியடைந்த சூழலை தவிர்ப்பது, சுத்தமான படுக்கை, தலையணை உறைகளை பயன்படுத்துவது, செல்லப் பிராணிகளிடம் மிக நெருக்கமாக பழகுவதை தவிர்க்கலாம். காரணம், அதன் எச்சில், மலம், முடிகள் போன்றவற்றால் கூட, ஒவ்வாமை ஏற்படலாம். ஆஸ்துமா பாதிப்பு எந்த அளவு உள்ளது?உலகளவில், 300 மில்லியன் ஆஸ்துமா நோயாளிகள் இருப்பதாக, உலக சுகாதார மையம் கூறுகிறது. இதில், 11.5 கோடி முதல், 2 கோடி நோயாளிகள் இந்தியாவில் உள்ளனர். காற்று மாசால், சமீபத்திய, 10 ஆண்டுகளில் ஆஸ்துமாவின் தாக்கம் அதிகரித்து உள்ளது.ஆஸ்துமாவை முற்றிலுமாக குணப்படுத்த முடியுமா?முறையான மருத்துவ சிகிச்சைகள் மூலம், ஆஸ்துமாவை கட்டுப்பாட்டிற்குள் வைத்து, இயல்பான வாழ்க்கை வாழ முடியும். சிகிச்சை பெறாவிட்டால் நோயின் வீரியம் அதிகமாகும்.-ஜி.கமல்குழந்தைகள் நலம் மற்றும் ஆஸ்துமா, அலர்ஜி சிறப்பு நிபுணர்.90475 87587


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !