உள்ளூர் செய்திகள்

கேன்சரை தடுக்கும் மஞ்சள்

பூண்டு, வெங்காயம் இரண்டிலும் சல்பர் அதிகம் இருப்பதால், தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். சர்வதேச அளவில் மஞ்சளில் மட்டும் 6,000 ஆய்வுகள் செய்ததில், கேன்சரை எதிர்த்து போராடும் தன்மையும், கேன்சர் செல்களுக்கு ரத்த ஓட்டத்தை குறைக்கும் திறனும், மஞ்சளில் உள்ள 'குர்குமின்' என்ற வேதிப் பொருளுக்கு இருப்பது தெரிந்தது.உடலில் தேங்கும் அதிகப்படியான உப்புச்சத்து, வியர்வை வாயிலாக வெளியேற, இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் உதவும்.இஞ்சி துருவலுடன் தேன் கலந்து சாப்பிடுவது, சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்; இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கும். சர்க்கரையின் பயன்பாட்டை இஞ்சியின் காரத்தன்மை அதிகரித்து, சத்துக்களாக மாறி, அதிக கலோரியை எரிக்க உதவும்; ரத்த சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்கும்.- நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !