உள்ளூர் செய்திகள்

உடல் பிரச்னைக்கு உகந்த உணவு எது?

தோல் நோய்கள்: மீன் எண்ணெய், தோல் பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரக்கூடியது. இயற்கையிலேயே அதிக எண்ணெய் உள்ள மீன்களை சாப்பிடுவது அல்லது மீன் எண்ணெய் மாத்திரைகளை, டாக்டரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.'குர்குமின்' என்ற இயற்கை பொருள் அதிகம் உள்ள, மஞ்சள், தோல் வீக்கம், அலர்ஜி போன்றவற்றைக் கட்டுப்படுத்தக் கூடியது. சமையல் அனைத்திலும், தவறாமல் மஞ்சள் சேர்க்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தரக்கூடியது.மஞ்சள் கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. சர்வதேச அளவில் செய்த ஆராய்ச்சியில், தொடர்ந்து மஞ்சள் சேர்த்துக் கொள்வது புற்று நோயைக்கட்டுப்படுத்த சிறந்த வழி என, கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !