உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / எப்படியாவது மகளை நடக்கவைக்கணும்

எப்படியாவது மகளை நடக்கவைக்கணும்

எப்படியாவது மகளை நடக்கவைக்கணும்ஒரு பாசக்கார தந்தையின் நீண்ட போராட்டம்...

சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஒட்டுனர் வெங்கடேசன், தனது மகளுக்கு வந்துள்ள விநோத நோயில் இருந்து அவரை மீட்கவேண்டும் என்பதற்காக கடந்த 5 வருடங்களுக்கு மேலாக போராடி வருகிறார்,அவரின் கதை இதோ..வெங்கடேசன்-புவியரசி தம்பதியினருக்கு ஒரே மகள் பெயர் ஆர்த்தி.படிப்பில் படு சுட்டியான இவர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டு இருக்கும் போது வயிற்று வலி என்று அவதிப்பட்டார், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதுதான் பேரதிர்ச்சி காத்திருந்தது.லட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடிய 'வில்சன் டிசீஸ்' என்ற கல்லீரல் பாதிப்பு நோய் வந்துள்ளது என்றனர். இந்த நோய்க்கு மருந்து மாத்திரையே ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு வாங்கவேண்டும், மாற்று கல்லீரல் பொருத்துவதற்கு பல லட்சம் செலவாகும் என்றனர்.ஆஸ்பத்திரிக்கு வருவதற்கு கூட அடுத்தவர் உதவியால் வந்த சூழ்நிலையில் ஆயிரத்திற்கும் லட்சத்திற்கும் எங்கே போவது உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.மாதக்கணக்கில் மகள் ஆஸ்பத்திரியில் இருந்த போதும் இவரும் அங்கேயே இருந்தார், வீட்டு வாடகை மற்றும் அன்றாட வாழ்வாதாரத்திற்காக பகல் முழுவதும் ஆட்டோ ஒட்டுவார்,இரவில் மகளுக்கு ஆதரவாக ஆஸ்பத்திரியில் இருந்து பணிவிடை செய்வார்.மாறறு கல்லீரலுக்காக மாதக்கணக்கில் காத்திருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது,ஒரு வழியாக சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.நடப்பதற்கு மகள் ஆர்த்தி சிரமப்பட உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார், இடுப்பு எலும்பு கரைந்துள்ளது உடனடியாக சிகிச்சை தராவிட்டால் தொடர்ந்து எலும்பு கரைந்து கொண்டேதான் இருக்கும் என்றனர்.இதற்கு ஹைதராபாத்தில் 'ஸ்டெம்செல்' மூலம் சிகிச்சை தந்து சரி செய்கின்றனர் என்ற தகவல் கிடைத்தது, உடனடியாக மகளை அழதை்துக் கொண்டு அங்கு சென்றார், அங்கும் சில வாரங்கள் சிகிச்சை,இந்த சிகிச்சை பலன் தரலாம் தரமாலும் போகலாம் என்று சொல்லியே டிஸ்சார்ஜ் செய்தனர்.ஆர்த்தியின் துரதிருஷ்டம் சிகிச்சை பலன் தரவில்லை,மெதுவாக நடந்து கொண்டிருந்தவர் பிறகு யாருடைய தயவோடுதான் நடக்கவேண்டியவரானார்.இதற்கு சிறப்பு சிகிச்சை சென்னை ரெலா மருத்துவமனையில்தான் கிடைக்கும் என்றவுடன் அங்கும் சென்றார்,அவர்கள் சோதித்து பார்த்துவிட்டு இரண்டு இடுப்பு எலும்புகளையுமே மாற்றவேண்டும் எட்டு லட்ச ரூபாய் செலவாகும் என்று சொல்லிவிட்டனர்.ஒவ்வொரு முறை பிரச்னை வரும்போதும் யாராவது நல்ல உள்ளங்கள்தான் நன்கொடை கொடுத்து உதவியுள்ளனர்,நமது இணயைத்தில் கூட இவரைப்பற்றி இதற்கு முன்பாகவே எழுதி வாசகர்கள் கணிசமாக உதவியுள்ளனர்.மகளை எப்படியாவது காப்பாற்றி நடக்கவைத்துவிட மாட்டாமா? மற்ற பெண்களைப் போல இயல்பாக நடந்துவிட மாட்டாரா? என்று கடந்த 5 வருடங்களாக போராடிவரும் வெங்கடேசனுக்கு இது கடைசி முயற்சி என்று கூட சொல்லலாம்.உதவ நினைப்பவர்கள் வெங்கடேசனிடம் பேசிவிட்டு நேரடியாக மருத்துவமனைக்கே பணத்தை செலுத்திவிடலாம்,வெங்கடேசன் எண்:75502 43478.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Prajar
ஜூன் 13, 2024 07:53

இந்த தகவலைத் தெரிவித்தவரை மனுதாரர் பாராட்டுகிறேன்.


Vijayalakshmi Srinivasan
ஜூன் 06, 2024 09:35

கீழ்க்கண்ட விலாசஙகளைத் தொடர்பு கொண்டு முற்றிலும் இலவச அறுவை சிகிச்சை பெறலாம். மருந்துச் செலவுகள் மட்டும் சில ஆயிரங்கள் கொடுத்தால் போதும்: Panimalar Medical College Hospital & Research Institute Enquiry Number 044- 61616161 Ext- 125 UNM Children Hospital, Near SUGEN Mega Power Plant, Opposite Gaypagla Mandir, Off NH-48, Kamrej, Surat, Helpline No: +91 8980021026 Adeinath Jain Trust, No.1, Kandappa Street, Choolai, Chennai Ph: 044-42043001


angbu ganesh
ஜூன் 14, 2024 10:47

சொல்ல வார்த்தைகள் இல்லை, உங்களின் இந்த தன்னலம் இல்லாத குணத்திற்கு


புதிய வீடியோ