உள்ளூர் செய்திகள்

திருநங்கைகள் நடத்தும் நடமாடும் உணவகம்

கோவையில் நடமாடும் உணவகத்தை திருநங்கைகள் தொடங்கியுள்ளனர். டிரான்ஸ் பிரைடு - ஃபுட் ட்ரக் (Trans Pride Food Truck) என்று பெயரிடப்பட்டுள்ள இவ்வுணவகத்தை, தஸ்லிமா, சுசித்ரா, யாமினி ஆகிய மூன்று திருநங்கைகள் தொடங்கியுள்ளனர். ஃப்ரான்கீஸ், பர்கர், சாண்ட்விச், ஜூஸ் போன்ற பலவித உணவுகளை நடமாடும் உணவகத்தில் தயாரிக்கிறார்கள். கோவையிலுள்ள 10 கல்லூரிகளுக்குச் சென்று உணவை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளனர். ”நாளைய சமூகம் மாணவர்களிடமே என்பதால், அவர்களிடையே திருநங்கைகளைப் பற்றிய தவறான எண்ணங்களைக் களைவது முக்கியம். சரியான வாய்ப்புக் கிடைத்தால் நாங்கள் உழைப்பின் மூலம் உயர்வோம் என்ற எண்ணத்தை அவர்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, கல்லூரிகளை நோக்கிச் செல்கிறோம்” என்று தஸ்லிமா தெரிவித்துள்ளார். இந்தப் புதுமையான முயற்சி மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !