கனத்த குரல் எழுப்பும் சிறு பறவை
மஞ்சள் குருகுஆங்கிலப் பெயர்:'யெல்லோ பிட்டர்ன்'(Yellow Bittern)உயிரியல் பெயர்:'லக்சோபிரைகஸ் சினென்சிஸ்'(Lxobrychus Sinensis)குடும்பம்:'அர்டேய்டே'(Ardeidae)வேறு பெயர்கள்:மணல் நாரை,மஞ்சள் கொக்கு, செவ்வரி நாரைநீளம்: 40 செ.மீ.எடை: 100 கிராம்இறக்கையின் அகலம்: 55 செ.மீ.நாரை குடும்பத்தைச் சேர்ந்த சிறிய பறவை மஞ்சள் குருகு. அதிகம் பறக்காமல் தாவிச் செல்லும் பறவை இது. குட்டையான கழுத்தும், மஞ்சள் கலந்த வெண் பழுப்பு நிற உடலும் உடையது. இறக்கைகள் கருப்பு நிறத்தில் இருக்கும்.புதர்போன்ற கருத்த கொண்டையும, சாம்பல் கலந்த கருமை நிற வால் பகுதியும் கொண்டது. கனத்த குரல் எழுப்பி, சிறகடித்துப் பறக்கும். நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள புதர்ப்பகுதிகளில் வசிக்கும். கடலோரப் பகுதிகளிலும் காணப்படும்.சிறு பூச்சிகள், மீன், நத்தை, தவளை, நிலநீர் வாழ் உயிரினங்கள் போன்றவையே இதன் உணவு. இனப்பெருக்கத்திற்காக சிறிய தொலைவுகளுக்கு வலசை செல்லும். உயரமான புற்கள் அடர்ந்த பகுதியில் புல், சருகு போன்றவற்றைக்கொண்டு மெத்தை போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அதில் நான்கு முதல் 8 முட்டைகள் இடும்.இந்தியத் துணைக்கண்டத்தின் வட பகுதி, ஜப்பான் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் பரவலாகக் காணப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் நுணுக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள பறவைகளில் இதுவும் ஒன்று.- நிவேதா