புவியைப் பற்றி: எந்தக் கோள்?
இது தான் பிரபஞ்சத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் வெளிக் கோள் (நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே இருக்கும் கோள் - Exoplanet). 1995ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இது நமது பூமியிலிருந்து 51 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.இது தன்னுடைய நட்சத்திரத்தைச் சுற்றி வர 4 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.இந்தக் கோள் நமது வியாழனை விடப் பெரியது. இதன் கண்டுபிடிப்பு பிரபஞ்சத்தைப் பற்றிய நமது புரிதலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றது. அது எந்தக் கோள் என்று கண்டுபிடித்தீர்களா?விடைகள்: டிமிடியம் (Dimidium) எனப்படும் 51 Pegasi b கோள்