புவியைப் பற்றி: மெய்யா, பொய்யா?
இங்கு சில வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மெய்யா, பொய்யா என்று கண்டறியுங்கள். 1) சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட TOI-3261 b கோள் தனது நட்சத்திரத்தைச் சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் 21 ஆண்டுகள். 2) கிடார் வடிவ நெபுலா பூமியிலிருந்து 2,700 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைத்துள்ளது.3) நமது பூமியின் நிலவை விட சனியின் நிலவான டைட்டன் பெரியது.4) பூமியிலிருந்து 25 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள L 98-59 d கோள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 2023.5) அரேபியா டெரா (Arabia Terra) என்பது செவ்வாயின் ஒரு நிலப்பரப்பு. விடைகள்: 1) பொய். 21 நாட்கள் 2) மெய்3) மெய்4) பொய். 2019ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. 5) மெய்