உள்ளூர் செய்திகள்

அமில மழை

அமில மழை (Acid Rain - ஆசிட் ரெயின்) என்பது அதிக அளவு அமிலத் தன்மை உடைய மழை. காற்றை மாசுபடுத்தும் சல்ஃபர் டை ஆக்ஸைடு (Sulphur Dioxide), நைட்ரஜன் ஆக்ஸைடு (Nitrogen Oxide) போன்றவை காற்றில் கலப்பதால் அமில மழை பெய்கிறது. சாதாரணமாகப் பெய்யும் மழையில் அமிலத் தன்மை மிகவும் குறைவாக இருக்கும். வாகனங்களின் புகை, தொழிற்சாலைப் புகை, குப்பைகள் எரிப்பதால் ஏற்படும் புகை போன்றவை காற்றில் கலப்பதன் மூலம், அமில மழை உண்டாகிறது. எரிமலை சீற்றத்தின் போது இயற்கையாகவே அமில மழை உண்டாகிறது. அமில மழையின் பாதிப்புகள்* கட்டடங்களில் அரிப்பு* நிலம், நீர்ப் பரப்புகளில் அமிலம் படிதல்* வனப்பகுதிகள் அழிதல்* நீர் வாழ் உயிரினங்கள் அழிதல்ப.கோபாலகிருஷ்ணன், எழுத்தாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !