உள்ளூர் செய்திகள்

அமிழ்தமிழ்து: குறள் உணர்த்தும் பழமொழி

இந்தக் குறள்களைப் படித்துப் பாருங்கள். பழமொழி ஒன்றை ஒவ்வொரு குறளும் உணர்த்தும். தரப்பட்டிருக்கும் குறள்கள் உணர்த்தும் பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள். 01. எடை குறைவான மயில் பீலியை அளவுக்கு மீறி ஒரு வண்டியில் ஏற்றினால் அந்த வண்டியின் அச்சாணி முறிந்துவிடும். பீலிபெய் சாகாடும் அச்சிறும் - அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்02. நம் முயற்சி நமக்குச் செல்வத்தைக் கொடுக்கும். முயற்சியே செய்யாமல் இருப்பது வறுமையைத் தரும். முயற்சி திருவினை ஆக்கும் - முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும்03. தேவைப்படுபவருக்கு அவரது தேவையை அறிந்து பொருத்தமான அளவில் ஈகையாகக் கொடுக்க வேண்டும்.ஆற்றின் அளவறிந்து ஈக - அதுபொருள்போற்றி வழங்கும் நெறினிடைகள்1. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு2. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்3. ஆத்துல போட்டாலும் அளந்து போடு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !