உள்ளூர் செய்திகள்

அமிழ்தமிழ்து: தலையைக் கண்டுபிடியுங்கள்

'தலை' என்ற சொல் உடல் உறுப்பினை மட்டும் குறிப்பதில்லை. அதனை முன்னொட்டாகக் கொண்டு, எண்ணற்ற சொற்களையும் பயன்படுத்துகிறோம்.உடலின் முதன்மை உறுப்பு என்பதனால் உயர்வான அனைத்தையும் 'தலை' என்ற சொல்லில் குறிக்கிறோம். எண்ணிக்கையில் முதலாவதாக இருப்பதனையும் 'தலை' என்று சேர்த்துக் கூறுவோம். இங்கே 'தலை' என்ற முன்னொட்டு அமைந்த சொற்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டு உரிய சொற்களை எழுதுங்கள். அ. வீட்டின் முதன்மையான நுழைவு வழி.______________________________ஆ.குடும்பத்தின் மூத்த பிள்ளை. ______________________________இ. செருக்கு.______________________________ஈ. ஒன்றில் இன்னொருவர் புதிதாக நுழைவது.______________________________உ. மிகச் சிறந்தது. ______________________________ஊ. முனைப்பகுதியோடு அறுக்கப்பட்ட வாழையிலை.______________________________எ. அலுத்துக்கொண்டு விதியினைக் குறிப்பது. ______________________________ஏ. பரம்பரையாகத் தொடரும் குடும்ப மரபு.______________________________ஐ. பிடிவாதமாய் நிற்றல்.______________________________-மகுடேசுவரன்விடைகள்:அ. தலைவாயில்ஆ. தலைப்பிள்ளை/தலைச்சன்இ. தலைக்கனம்ஈ. தலையீடுஉ. தலைசிறந்தது ஊ. தலைவாழையிலைஎ. தலையெழுத்து ஏ. தலைக்கட்டுஐ. தலைகீழாய் நிற்றல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !