குரங்கிலிருந்து மனிதன்
குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். (அதை நிரூபிக்கும் விதமாகத்தான் அடிக்கடி நாம் சேட்டைகள் செய்கிறோமோ...?)குரங்கு மனிதன் ஆன பரிணாம வளர்ச்சியை சுருக்கமாகப் பார்ப்போம்!கொரில்லா, சிம்பன்சிஆஸ்ட்ரலோபிதிகஸ் (Australopithecus) (ஹோமினிட் - Hominid)* உயரம்: 1.10 மீட்டர்* எடை: 40 கிலோ* நேராக நிமிர்ந்து நடந்தவர்கள்ஹோமோ ஹேபிலிஸ் (Homo Habilis)* உயரம்: 1.59 மீட்டர்* எடை: 50 கிலோ* கற்களால் ஆன கருவிகளைப் பயன்படுத்தி வேட்டையாடினர்.* குரல் எழுப்பி சைகை பாஷையால் பேசினார்கள்.ஹோமோ எரக்டஸ் (Homo Erectus)* உயரம்: 1.60 மீட்டர்* எடை: 60 கிலோ* நெருப்பைக் கண்டுபிடித்தனர்.* குழுவாகச் சேர்ந்து வேட்டையாடி உண்டனர்.ஹோமோ நியாண்டர்தாலென்சிஸ் (Homo Neonderthalensis)* உயரம்: 1.65 மீட்டர்* எடை: 80 கிலோ* வேட்டையாடும் புதிய கருவிகளை உருவாக்கினர்.* இறந்த உடல்களைப் புதைக்கவும், எரிக்கவும் செய்தனர்.ஹோமோ ஸேப்பியன்ஸ் (Homo Sapiens)* உயரம்: 1.70 மீட்டர்* எடை: 70 கிலோ* பாறைகளில் ஓவியம் வரையத் தொடங்கினார்கள்* எலும்புகள், மிருகங்களின் கொம்புகளில் வேட்டையாடும் ஆயுதங்கள் செய்தார்கள்.