உள்ளூர் செய்திகள்

டாட்டூவில் ரத்த பரிசோதனை முடிவுகள்

ரத்தப் பரிசோதனைக்காக ஊசியால் குத்தி ரத்தம் எடுக்கும்போது பலரும் பயப்படுவர். அவர்களின் கவலையைத் தீர்த்து வைக்கிறது அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பல்கலைக்கழக ஆய்வு. ஒவ்வொரு முறையும் ரத்தம் எடுக்காமலேயே ரத்த பரிசோதனை முடிவுகளைக் கண்டறிய, நாம் செய்ய வேண்டியதெல்லாம், நம் உடலில் டெர்மல் அப்யஸ் (Dermal Abyss) எனப்படும் நவீன டாட்டூவை வரைந்துகொள்வதுதான். இந்த டாட்டூ, பயோ சென்சார்களால் (Biosensors) ஆன மை மூலம் குத்தப்படுகிறது. எனவே அந்த டாட்டூ வரையப்பட்டுள்ள உடல் பகுதியில் பாயும் ரத்தத்தின் தன்மைக்கேற்ப டாட்டூவின் நிறம் மாறும். ரத்தத்தில் கலந்துள்ள குளுக்கோஸ், சோடியம், காரத்தன்மை போன்றவற்றின் அளவு மாற்றங்களை இம்முறையில் கண்டறிய முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !