உள்ளூர் செய்திகள்

கோலாகலக் கோலா

பார்ப்பதற்கு பொம்மை போல மிக அழகாக இருக்கிற இதன் பெயர் கோலா (Koala) ஆஸ்திரேலியாவில் மட்டுமே இவை காணப்படும். அறிவியல் பெயர்: பாஸ்கோலார்டோஸ் சினிரியூஸ் (Phascolarctos cinereus)குடும்பம்: மார்சுபியல்;! (Marsupials) இனம்: பாலூட்டி (Mammals)வாழ்நாள்: 13 - 18 வருடங்கள்எடை: 15 கிலோவரைஉணவுப் பழக்கம்: தாவர உண்ணிநீளம்: 90 சென்டி மீட்டர்நிறம்: உடல் சாம்பல் நிறம் மார்புப் பகுதி வெண்மை நிறம்கோலா குட்டி 'ஜோயி' (Joey) என்று அழைக்கப்படும்.முதல் ஆறு மாதங்களுக்கு தாயின் வயிற்றின் முன் பகுதியில் உள்ள பை போன்ற பகுதியில் இருக்கும்.நீளம் (சென்டி மீட்டர்)140 கங்காரு100 வோம்பட்90 கோலா* ஒரு நாளில் 18 முதல் 20 மணி நேரம் வரை உறங்கும்.* பாலூட்டி இனத்தில் அதிக நேரம் உறங்கக்கூடிய இனம் கோலாதான்.* கோலா, யூகலிப்டஸ் இலைகளை மட்டுமே உண்ணும். யூகலிப்டஸ் மரங்களில் 600 வகைகள் உள்ளன. இதில் 10% வகை யூகலிப்டஸ் இலைகளை மட்டுமே கோலா உண்ணும். வளர்ந்த கோலா, அதிகபட்சமாக ஒரு கிலோ இலையையும் சராசரியாக 400 கிராம் இலையையும் ஒரு நாளில் 5 அல்லது 6 தடவையாகச் சாப்பிடும். * கோலா தனக்குத் தேவையான தண்ணீரை, தான் உண்ணும் யூகலிப்டஸ் மரங்களின் இலைகளிலிருந்தே பெற்றுக்கொள்கிறது. பெண் கோலாவுக்கு யூகலிப்டஸ் இலையிலிருந்து கிடைக்கும் தண்ணீரே போதுமானது. பெரிய ஆண் கோலா, மரப் பொந்துகளில் இருக்கும் நீரையும், தரையில் இறங்கி வந்து, கிடைக்கும் நீரையும் குடித்து தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும். * கோலா, கோடைக்காலத்தில் தாழ்ந்த மரக்கிளையில் தொங்கிக் கொண்டு ஓய்வு எடுக்கும். வேறு மரத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் மட்டுமே மரத்தைவிட்டுக் கீழே இறங்கும்.* ஆஸ்திரேலியாவில் மிருகக்காட்சி சாலைகளில் காணப்படும் கோலாக்கள் பால், தேநீர், ரொட்டி முதலியவற்றைச் சாப்பிடுகின்றன. * கங்காருவைப் போலவே கோலாவும் ஆஸ்திரேலியாவின் முக்கியமான ஓர் அடையாளச் சின்னம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !