உள்ளூர் செய்திகள்

திட்டி வாசல்

திட்டிவாசல் என்ற சொல்லை பெரும்பாலும் நாம் அறிந்திருக்க மாட்டோம். ஆனால் இப்படி ஒரு சொல் புழக்கத்தில் இருந்தது. சொல்லில் உள்ள 'வாசல்' என்பது அனைவருக்கும் புரியும். வீட்டின் முன் உள்ள திறந்த வெளிப்பகுதியை வாசல் என்போம்.அதென்ன திட்டி வாசல்? திட்டுவதைக் குறிக்குமா? ஊகூம்..இல்லை... இது வேறு! பெரியபெரிய மாளிகைகள், அரண்மனைகள், கட்டடங்கள் முன்பு பெரிய இரும்பு அல்லது மரத்தாலான கதவு இருக்கும். இந்தக் கதவை வாகனங்கள் அல்லது நிறைய ஆட்கள் செல்லும்போது மட்டும் திறந்து விடுவார்கள். மற்ற நேரங்களில் அந்தக் கதவிலேயே ஓர் ஆள் மட்டும் உள்ள சென்று வருவது போல் வழி அமைத்திருப்பார்கள். அதைத்தான் திட்டிவாசல் என்கிறார்கள். இனி எங்காவது பெரிய வாயில் முன் இது போன்ற குறுகிய வழியைக் கண்டால் அது 'திட்டிவாசல்' என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !