உள்ளூர் செய்திகள்

தேதி சொல்லும் சேதி!

பிப்ரவரி 13, 1879 - சரோஜினி நாயுடு பிறந்த நாள்சுதந்திரப் போராட்ட வீராங்கனை, எழுத்தாளர், 'கவிக்குயில்' என்று புகழப்பட்ட கவிஞர். 'இந்தியப் பெண்கள் சமையலறையை விட்டு வெளியே வந்து உரிமைக்காகப் போராட வேண்டும்' என்றார். சுதந்திரத்திற்குப் பிறகு, உத்தரப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டு, 'முதல் பெண் ஆளுநர்' என்ற பெருமையையும் பெற்றார்.பிப்ரவரி 13, 2012 - உலக வானொலி நாள்பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஐ.நா.வின் கல்வி,அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ இந்த நாளை அறிவித்தது.பிப்ரவரி 15, 1564 - கலிலியோ கலிலி பிறந்த நாள்நவீன வானியல் ஆய்வுகளின் தந்தை. தான் கண்டறிந்த தொலைநோக்கி மூலம் வியாழன் கிரகத்திற்கு 4 நிலாக்கள், சனிக்கிரகத்திற்கு வளையம், சூரியனில் கரும்புள்ளிகள் இருப்பதைக் கண்டுபிடித்தார்.பிப்ரவரி 16, 1834 - எர்ன்ஸ்ட் ஹேக்கல் பிறந்த நாள்உயிரினங்களின் பரிணாமக் கோட்பாடு வரலாற்றில் இவரது பங்களிப்பு முக்கியமானது. 'மனித குலம் தோன்றியது ஆசியாவில்தான், அதிலும் குறிப்பாக இந்திய துணைக் கண்டத்தில்தான்' என்பது இவரது கணிப்பு. உயிரியல் தொடர்பான பல சொற்களை அறிமுகம் செய்தார். பிப்ரவரி 18, 1836 - ஸ்ரீ ராமகிருஷ்ணர் பிறந்த நாள்19ம் நூற்றாண்டின் தலைசிறந்த ஆன்மிகவாதி. 'கடவுள் ஒருவரே, வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல வழிகள்' என்பதைத் தெளிவுபடுத்தினார். இவருடைய சீடர் விவேகானந்தர்.பிப்ரவரி 18, 1745 - அலெசாண்ட்ரோ வோல்ட்டா பிறந்த நாள்மீத்தேன் வாயுவையும் கண்டறிந்த இயற்பியலாளர். 1800களில் முதல் மின்கலத்தை உருவாக்கினார். இவருக்குப் பெருமை சேர்க்க மின் அழுத்த அலகானது 'வோல்ட்' எனவும், மின் அழுத்தத்தை அளக்கும் கருவி வோல்ட்மீட்டர் (Voltmeter) எனவும் குறிக்கப்படுகிறது.பிப்ரவரி 19, 1473 - நிகோலஸ் கோபர்நிகஸ் பிறந்த நாள்உலகப் புகழ்பெற்ற வானியலாளர். தொலைநோக்கிக் கருவி இல்லாமலேயே ஆராய்ச்சிகள் செய்தார். புவி மையக் கோட்பாட்டை மறுத்து, சூரிய மையக் கோட்பாட்டை வகுத்தார். கணித அடிப்படையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். வானியல் ஆய்வாளராக மட்டுமல்லாமல், சட்டம், மருத்துவம் என பல்வேறு துறைகளில் நிபுணராக இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !